மது போதையில் கார் ஓட்டிய நடிகர் ! போலீஸிடம் அபராதம் ! யார் தெரியுமா

0
587
PL Thennappan

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம்.இதன் உரிமையாளர் திரு பி எல் தெனப்பன்.

pl thenappan

1998 இல் கமல் மற்றும் பிரபுதேவா நடித்த காதலா காதலா என்ற வெற்றிப்படதை தயாரித்தார். அந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் பஞ்ச தந்திரம் ,பம்மல் கே சம்மந்தம் போன்ற படங்களை தயாரித்தார். இதுவரை 14 படங்களை தயாரித்துள்ளார். பின்னர் நடிகராகவும் நடிக்க துவங்கினார் சமீபத்தில் ஸ்கெட்ச்,பலூன், குரங்கு பொம்மை போன்ற படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

இவர் சமீபத்தில் சென்னையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரால் முது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதற்காக இவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.நேற்று இரவு சுமார் இரவு 1.30 மணியளவில் சென்னை கத்திட்ரல் சாலையில் தன்னுடைய ஹோண்டா சிட்டி காரில் சென்றுகொண்டிருந்தார்.

P-L-Thenappan

அப்போது சென்னை காவல் துறையால் சோதனைக்காக அவரது கார் வழிமறிக்கப்பட்டது .அப்போது காரில் எந்த ஒரு ஆவனமும் இல்லை என்று கூறப்படுகிறது.மேலும் தேனப்பன் குடிபோதையில் இருந்ததால் அவரை ஆட்டோ ரிக்ஷ்வில் வீட்டுக்கு அனுப்பிவைத்த காவல் துறை அவரது காரை பறிமுதல் செய்தது மேலும் அவருக்கு 2500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

thenappan

பின்னர் இன்று காலை காவல் நிலையத்திற்கு சென்று அபராதத்தை கட்டிவிட்டு தனது காரை கேட்டுள்ளார் ராயப்பன் ஆனால் உரிய ஆவணங்களை காண்பித்தாள் தான் காரை விடுவிக்கமுடியும் என்று கடுமை காட்டியுள்ளது காவல் துறை.