கோடி கோடியா பணத்த வாங்கிட்டு படம் Flop ஆகிடும்னு நெனச்சிட்டே நடிப்பியா – நயனை வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர்

0
585
nayanthara
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக லேடி சூப்பர் ஸ்டாராக நயன்தாரா திகழ்ந்து கொண்டிருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது. அதிலும் சமீபகாலமாக இவர் பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த படங்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் வெளிவந்த அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நயன் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

மேலும், தற்போது நயன்தாரா பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். இப்படி ஒரு நிலையில் நயன்தாராவை தயாரிப்பாளர் கே ராஜன் பயங்கரமாக கழுவி ஊற்றி இருக்கிறார். 90 காலகட்டத்தில் மிகப் பிரபலமான தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் வலம் வந்தவர் கே.ராஜன். இவர் எப்போதும் திரையுலகை விமர்சிப்பதும், நடிகர் நடிகைகள் குறித்து கடுமையாக பேசுவதும் போன்ற பல்வேறு சிக்கல்களில் சிக்கிக் கொண்டு வருகிறார்.

- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், நடிகைகளை பயங்கரமாக திட்டி தீர்ப்பது தயாரிப்பாளர் ராஜன் உடைய வழக்கம். அந்த வகையில் தற்போது இவர் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் நயன்தாராவை வெளுத்து வாங்கிய இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, தற்போது தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா பெரும்பாலும் அவர் படங்களின் பிரமோஷன் விழாவிற்கு வருவதில்லை. இதுகுறித்து பேட்டியில் அவரிடம் கேட்டபோது அவர் சொல்லியது, நான் வந்து படம் நல்லா இருக்கு என்று சொல்லிவிட்டு ரிலீசான பிறகு படம் நல்லா இல்லை என்று சொன்னால் என்னுடைய பெயர் கெட்டுப் போகும்.

அதனால் தான் நான் வருவதில்லை என்று சொல்லி இருக்கிறார். அப்படி உங்க படம் நல்லா இருக்குமா? இல்லையா? என்று தெரியாமல் தான் 5 கோடி பணம் வாங்கினீர்கலா? படம் நல்லா இல்லை என்பதற்காகவா உங்களுக்கு அவ்வளவு பணம் தருகிறார்கள். ஆனால், இவர் நடித்த மூக்குத்தி அம்மன் படத்தின் பிரமோஷனுக்காக வந்திருந்தார். காரணம் அந்த படம் அவர்களே தயாரித்தது என்று ராஜன் நயன்தாராவைப் பங்கமாக கிண்டல் கேலி செய்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement