உன் பக்கத்துல ஒக்காந்துட்டேன் இல்ல, அந்த பயில்வான் என்ன பண்ணுவான் தெரியுமா ? ராஜன் பேச்சால் மேடையில் இருந்து தெறித்து ஓட பார்த்த நடிகை.

0
506
rajan
- Advertisement -

தயாரிப்பாளர் ராஜன் சமீப காலமாக படங்களை தயாரிப்பது கிடையாது மாறாக இவர் அடிக்கடி youtubeல் பிரபலங்கள் குறித்தும் சினிமா தயாரிப்பாளர்கள் குறித்தும் நடிகர்கள் வாங்கும் சம்பளம் குறித்தும் தொடர்ந்து பேசி வருகிறார். உச்ச நடிகர்கள் என்று கூட பாராமல் மிகவும் தைரியமாக தன்னுடைய கருத்துக்களை தெரிவித்து வரும் ராஜன் பேச்சுக்கள் சமூக வலைதளத்தில் அடிக்கடி சர்ச்சைகளை கூட ஏற்படுத்தி விடுகிறது. இதனாலேயே இவரை படங்கள் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

அவ்வாறு இவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் கூட அவ்வப்போது சர்ச்சையாக பேசி வருகிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் என்னை மாற்றும் காதலே என்ற படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். புதுமுகங்கள் விஷ்வ கார்த்திகேயா, கிருத்திகா சீனிவாஸ் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் அலி, துளசி, ஜெயப்பிரகாஷ், இளவரசு, ஜார்ஜ் மரியன், லொள்ளு சபா சாமிநாதன், டேனியல் வாசுதேவன், கிருஷ்ணவேணி, நாராயணராவ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளார்கள்.

- Advertisement -

கோமலி வழங்க ஆர்.ஆர்.கிரியேட்டிவ் கமர்ஷியல் நிறுவனம் சார்பில் என்.சந்திரமோகன் ரெட்டி தயாரித்திருக்கும் இப்படத்தின் திரைக்கதை எழுதி ஜலபதி.பி இயக்கியிருக்கிறார்.இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள துளசி தமிழ் சினிமாவில் குழந்தையில் இருந்து நடித்து வருகிறார். மேலும், இவர் 2010 ஆம் ஆண்டு வெளியான “ஈசன்” படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் “பண்ணையாரும் பதமினியும், ஆதாலால் காதல் செய்வீர், பாண்டிய நாடு “போன்ற காதல் படங்களில் நடித்துள்ளார்.

Bayilwan

மேலும், விஜய்யின் சர்க்கார் படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்து இருந்தார். தற்போது என்னை மாற்றும் காதலே படத்தில் நடித்துள்ளார். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் விழா ஒன்றில் ராஜன் பேசுகையில் ‘எனக்கு சில விரோதிகள் இருக்கிறார்கள் நான் துளசி பக்கத்தில் அமர்ந்திருந்தேன் அதை ஏதாவது புகைப்படம் எடுத்து வெளியில் போட்டு வேறு விதமாக சித்தரிப்பார்கள் அவர்களெல்லாம் பயில்வான்கள்.

-விளம்பரம்-

அவனுங்க எல்லாம் செக்ஸ் வியாபாரிகள் என்று ராஜன் சொன்னதும் ஒரு கணம் துளசி பதறிப் போனார். மேலும், ராஜன் பேசியதை கேட்டு மேடையில் இருந்து ஓட்டம் பிடித்தார் துளசி. அதன் பின்னர் ராஜன் ‘ஓடினால் என்ன பண்ணுவான் ராஜனை விட்டு ஓடினார் துளசி என்று சொல்லுவான் என்று எப்படி வேண்டுமானாலும் பண்ணுவார்கள் என்று வயல்வான் ரங்கநாதன் விமர்சித்து இருந்தார் ராஜன்.

சமீபத்தில் தான் ‘நடிகர், நடிகைகளுக்கும் எதிராக ரகசியங்களை வெளியிடுகிறேன் என்று சொல்லி பொய்யான செய்திகளை பயில்வான் ரங்கநாதன் ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் பேசி ‘நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தமிழ் மக்கள் இயக்கத்தின் தலைவர் கே ராஜன் புகார்அளித்து இருந்தார். இதை தொடர்ந்து பேட்டி ஒன்றில் பேசிய பயில்வான் என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது. என்னை யாராவது தாக்க வந்தால் அரிவாளால் அவர்களின் கழுத்தை அறுத்து விடுவேன் என்று பேசி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement