‘இப்பவே இப்படி பண்றயே’ – குழந்தை என்றும் பாராமல் கொட்டாச்சி மகளை கடிந்த ராஜன். திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.

0
484
manasvi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் கொட்டாச்சி. வடிவேலு, விவேக் போன்ற முன்னணி காமெடி நடிகர்களுடன் படத்தில் இணைந்து கலக்கிய கொட்டாச்சியை சமீப காலமாகவே படத்தில் காண முடியவில்லை. இவர் சினிமா உலகில் தன்னை சிறந்த காமெடியனாக நிலைநிறுத்திக் கொள்ள பல போராட்டங்களை செய்து வருகிறார். இந்நிலையில் இவருடைய மகள் மானஸ்வி குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் மிகப் பிரபலம் ஆகி விட்டார்.

-விளம்பரம்-

கடந்த ஆண்டு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வந்து சூப்பர் ஹிட் கொடுத்த இமைக்காநொடிகள் படத்தில் நயன்தாராவின் மகளாக மானஸ்வி நடித்து இருந்தார். இந்த படத்தில் மானஸ்வி நடிப்பு பாராட்டக்கூடிய வகையில் இருந்தது. இதனாலே இந்த படத்தின் மூலம் மானஸ்வி விரைவாக மக்கள் மத்தியில் பிரபலமானார். பிறகு பல படங்களில் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார்.

- Advertisement -

சிறந்த குழந்தை நட்சத்திர விருது :

மேலும்,இந்த வருடம் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தர்பார் படத்தில் கொட்டாச்சியின் மகள் மானஸ்வி நடித்து இருந்தார்.அதே போல கொட்டாச்சி மகள் மானஸ்வி மலையாளத்தில் மை சாண்டா என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக இவர் நடித்ததற்கு இவருக்கு அந்த ஆண்டின் சிறந்த குழந்தை நட்சத்திர விருது மானஸ்விக்கு கிடைத்து இருந்தது.

இந்த விருதை தன் தந்தை கொட்டாச்சி உடன் சென்று வாங்கி இருந்தார் மானஸ்வி. தற்போது மானஸ்வி, ஹன்சிகா நடித்துள்ள மஹா படத்தில் நடித்து இருக்கிறார். ஹன்சிகாவின் 50-வது படமாக உருவாகியிருக்கும் படம் ‘மஹா’. ஜமீல் இயக்கியுள்ள இப்படத்தை ‘எட்ஸெட்ரா எண்டெர்டெய்ன்மெண்ட்’ நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசர் மற்றும் ஒரு பாடல் வெளியானது.

-விளம்பரம்-

மஹா படத்தில் மானஸ்வி :

மேலும் இந்த படத்தில் ஹன்சிகாவின் முன்னாள் காதலரான சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டி இருக்கிறது.  குழந்தைகளை கடத்தி கொடூரமாக கொலை செய்யும் ஒரு சைக்கோ கொலைகாரனிடம் ஹன்சிகா குழந்தையும் மாட்டிக்கொள்கிறது. அந்த சைக்கோவிடம் இருந்து குழந்தையை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதே இந்த படத்தின் கதை.

மானஸ்வியை கடிந்த ராஜன் :

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் பிரெஸ் மீட் சமீபத்தில் நடைபெற்றது. இதில் மானஸ்சி பேசிய போது படக்குழு அனைவருக்கும் நன்றி தெரிவித்து இருந்தார். அப்போது அவரை அழைத்த தயாரிப்பாளர் ராஜன் ‘எல்லாருக்கும் நன்றி சொல்லிவிட்டு ஒரு தயாரிப்பாளரை இப்பவே விட்டுட்டியே தயாரிப்பாளர் மதியழகன் பெயரை சொல்லவில்லை என்று செல்லமாக அதற்கு நான் பின்னர் மானஸ்ரீ மன்னிப்பு கேட்டுவிட்டு அவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார். இந்த வீடியோவை கண்ட பலரும் குழந்தையிடம் கூட இப்படி பேசுவீர்களா என்று ராஜனை திட்டி தீர்த்து வருகின்றனர்.

Advertisement