கல்யாண ஜோரில் உமாபதி அந்தரத்தில் தொங்கவிட்ட பித்தல மாத்தி – தயாரிப்பளார் சொன்ன அதிர்ச்சி தகவல்

0
165
- Advertisement -

கல்யாண ஜோரில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி அந்தரத்தில் தவிக்க விட்டார் என்று தயாரிப்பாளர் சரவணன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் உமாபதி. இவர் பிரபல நடிகர் தம்பி ராமையாவின் மகன் ஆவார். உமாபதி சினிமாவில் ஆரம்பத்தில் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அதற்குப் பின்னும் இவர் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். இப்படி இருக்கும்போது இவரும் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவிற்கும் இடையே காதல் மலர்ந்திருக்கிறது.

-விளம்பரம்-

இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து பச்சைக் கொடி காட்டியிருந்தார்கள். கடந்த ஆண்டு இவர்களுடைய நிச்சயதார்த்தம் எளிமையாக ஆஞ்சநேயர் கோயிலில் நடந்தது. பின் சில தினங்களுக்கு முன்பு தான் பிரம்மாண்டமாக உமாபதி- ஐஸ்வர்யா திருமணத்தை அர்ஜுன், தம்பி ராமையா நடத்தி இருந்தார்கள். இவர்களுடைய திருமணத்தில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்து இருந்தார்கள். திருமணம் தொடர்பான புகைப்படங்கள் எல்லாமே இணையத்தில் வைரலாகி இருந்தது. பலருமே வாழ்த்து தெரிவித்தார்கள்.

- Advertisement -

உமாபதி நடித்த படம்:

இப்படி இருக்கும் நிலையில் தயாரிப்பாளர் பித்தல மாத்தி படத்தின் தயாரிப்பாளர் அர்ஜுன் மருமகன் உமாபதி மீது கொடுத்திருக்கும் புகார் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, உமாபதி நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி இருந்த படம் தண்ணி வண்டி. இந்த படத்தில் சில நடிகர்களையும், காட்சிகளையும் மாற்றி பித்தல மாத்தி என்ற பெயரில் ஜூன் 14-ஆம் தேதி தயாரிப்பாளர் சரவணன் வெளியிட்டு இருக்கிறார்.

படம் குறித்த சர்ச்சை:

இந்த படத்தில் பால சரவணன், தம்பி ராமையா, தேவதர்ஷினி, வித்யூலேகா ராமன், ஆடுகளம் நரேன், மதுரை முத்து உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், இந்த படம் வெளியாகி திரையரங்கிற்கு 50 பேர் கூட வரவில்லை. அது மட்டும் இல்லாமல் 15 டிக்கெட் கூட ஆன்லைனில் விற்கப்படவில்லை. இதனால் தியேட்டர் நிர்வாகம் இந்த படத்தை வெளியான இரண்டே நாளில் தூக்கி இருக்கிறார்கள். இதை அறிந்த தயாரிப்பாளர் சரவணன், தியேட்டர் நிர்வாகத்திடம் கேட்டிருக்கிறார்.

-விளம்பரம்-

தயரிப்பாளர் சரவணன் பேட்டி:

அதற்கு நிர்வாகம், படம் தொடர்பாக எந்த பேனரும் வைக்கவில்லை, விளம்பரமும் செய்யவில்லை. அப்படி இருக்கும்போது எப்படி படத்தை வெளியிட முடியும் என்று கேட்டிருக்கிறார். அதற்குப் பின் எப்படியோ பேசி தயாரிப்பாளர் சரவணன் படத்தை திரையரங்கில் ஓட அனுமதி வாங்கி இருக்கிறார். அதற்கு பின் அவர் செய்தியாளர்களை சந்தித்து, எல்லோருமே என்னை பழி வாங்குகிறார்கள். கல்யாண சோக்கில் உமாபதி இருந்தாலும், படத்தில் நடித்த எல்லோருமே படம் ரிலீஸ்க்கு வரவில்லை, திரையரங்கிற்கு வரவில்லை. ஒரு கிராமத்தில் ஒரு குடும்பத்தை மட்டும் ஒதுக்கி வைத்திருப்பார்கள்.

உமாபதி குறித்து சொன்னது:

அதே போல் என்னை மட்டும் ஒதுக்கி வைத்து அவர்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். எதற்காக இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை. கதாநாயகன் உமாபதி திருமணத்தில் பிஸியாக இருந்தாலும் ஒரு சின்ன வீடியோவா படத்திற்காக போட்டு இருக்கலாம். அவர் மட்டும் இல்லாமல் படத்தில் நடித்த நடிகர்கள் யாருமே படம் தொடர்பாக எந்த ஒரு வீடியோவோ, பதிவோ போடவில்லை, யாரிடமும் பேசவில்லை. இது ரொம்ப மன வருத்தத்தை கொடுக்கிறது. இது தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளிக்க வேண்டும் என்றால் நான் அடுத்தடுத்து படங்கள் இயக்க வேண்டும். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இதனால் எனக்கு தேவையில்லாமல் பிரச்சனை வரும் என்று வேதனையோடு பேசியிருக்கிறார்.

Advertisement