அகிலம் ஆராதிக்க ‘வாடிவாசல்’ திறக்கிறது – தயாரிப்பாளர் தாணு கொடுத்த அதிரடி அப்டேட்

0
172
- Advertisement -

சூர்யாவின் வாடிவாசல் படம் குறித்து தயாரிப்பாளர் தாணு வெளியிட்டு இருக்கும் அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூர்யா. இவர் பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகன், பிரபல நடிகர் கார்த்தியின் அண்ணன் ஆவார். சூர்யா நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது.

-விளம்பரம்-

அந்த வகையில் கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியாகி இருந்த படம் ‘கங்குவா’. இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் பாபு, இருந்தார்கள். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்தார். இந்த படம் முழுக்க முழுக்க 3Dயில் உருவாக்கப்பட்டு இருந்தது.

- Advertisement -

கங்குவா படம் :

மேலும், வரலாற்று பின்னணியை மையமாக வைத்து இந்த படத்தை வித்தியாசமான பாணியில் இயக்குனர் கொடுத்து இருந்தார். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதை அடுத்து சூர்யா பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் பலரும் எதிர்பார்க்கும் படங்களில் ஒன்று தான் வாடிவாசல். இந்த படத்தை இயக்குனர் வெற்றி மாறன் இயக்குகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரிக்கிறார்.

வாடிவாசல் படம்:

சி.சு செல்லப்பாவின் வாடிவாசல் நாவலை தழுவி இந்த படம் எடுப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டில் அறிவிப்பு வெளியாகி இருந்தது. ஆனால், வெற்றி மாறன் அவர்கள் விடுதலை படத்தினுடைய வேலைகளில் பிஸியாக இருந்ததால் வாடிவாசல் படம் எடுக்க தாமதமானது. இருந்தாலுமே வாடிவாசல் படத்திற்கான டெஸ்ட் சூட் புகைப்படத்தை கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தார்கள். அதற்குப்பின் படம் வெளியாகுமா? என்று பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

-விளம்பரம்-

தாணு பதிவு:

இந்த படத்திற்காக நடிகர் சூர்யா இரண்டு காளைகளை தன்னுடைய வீட்டிலேயே வாங்கி வளர்த்து வருகிறார்.
ஏற்கனவே இந்த படத்திற்கான சில அனிமட்ரானிக்ஸ் வேலைகளும் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி
இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் மாட்டுப் பொங்கல் ஆன இன்று சூர்யா- வெற்றிமாறன் உடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை தயாரிப்பாளர் தாணு வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், அகிலம் ஆராதிக்க வாடிவாசல் திறக்கிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

படம் குறித்த அப்டேட்:

இதன் மூலம் வாடிவாசல் படத்தினுடைய படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் தான் சூரி- விஜய் சேதுபதி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 படம் வெளியாக இருந்தது. விடுதலை முதல் மற்றும் இரண்டு பாகமுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. அதுமட்டுமில்லாமல் விடுதலை படத்தினுடைய வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிக்கும் படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியாகி இருந்தது.

Advertisement