மெர்சல் படம் ஓடும் தியேட்டர்கள் முன்பு நாளை ஆர்ப்பாட்டம் – அர்ஜுன் சம்பத்

0
1030
arjun-sampath

மெர்சல் திரைப்படம் ஓடும் தியேட்டர்கள் நாளை முற்றுகையிடுவோம் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.

mersalமெர்சல் திரைப்படத்தில் இந்து மதத்தை புண்படுத்தும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அது போன்ற காட்சிகள் படங்களில் இடம் பெறக்கூடாது. இந்த காட்சிகளை படத்தில் இருந்து நீக்க வேண்டும். இல்லையெனில் படம் ஓடும் அனைத்து திரையரங்குகளையும் நாளை முற்றுகையிடுவோம் . விஜய் இந்து மதத்தை புண்படுத்தும் நோக்கில் நடந்து வருகிறார். அவருக்கு நாங்கள் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.mersal

கமல்ஹாசன் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். ரஜினியும் அதயே செய்கிறார். கமல் ஒரு நாத்திகவாதி, ஆனால், ரஜினி ஒரு ஆன்மீகவாதி, இருவரும் அரசியலுக்கு வரலாம். ஆனால், ஆன்மீக வாதியான ரஜினியானால் மட்டும் தான் வெற்றி பெற இயலும் கமலினால் அரசியல் கலத்தில் ஜொலிக்க முடியாது
எனக் கூறியுள்ளார் அர்ஜுன் சம்பத்