சென்னை கே.கே.நகரில் உள்ள பிரபல பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகார் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பி.எஸ்.பி.பி பள்ளியில் பணிபுரிந்து வரும் வணிகவியல் ஆசிரியர் ஒருவர் மாணவிகளிடம் அநாகரீகமான கேள்விகளை கேட்டு தர்மசங்கடத்துக்குள்ளாக்கி இருக்கிறார். நாகரீகமாக உடைகளை அணிந்த மாணவிகளை தரக்குறைவாக பேசுவது, பாலியல் நோக்கத்தோடு கேட்ககூடாத கேள்விகளைக் கேட்டபது என்று அந்த ஆசிரியர் செய்து வந்துள்ளார். இதற்கு எல்லாம் மேலாக ஆன் லைன் வகுப்பில் வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு பாடம் நடத்தியுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக மாணவிகள் அளித்த புகாரின் பேரில் ஆசிரியர் ராஜகோபாலன் போலிசாரால் கைது செய்ப்பட்டுளளார்.

மேலும், விசாரணையில் அவர் மாணவிகளிடம் கடந்த 5 ஆண்டுகளாக இப்படி நடந்துவந்துள்ளதாக வாக்குமூலமும் அளித்துள்ளார். இந்த பள்ளியானது, திரைப்பட நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தந்தையார்,  ஒய்.ஜி.பார்த்தசாரதி (யேச்சா குஞ்சா பார்த்தசாரதியால் ( யேச்சகுஞ்சா பார்த்தசாரதி ; 30 செப்டம்பர் 1917 – 1990) தொடங்கப்பட்டது. அவரது மறைவுக்கு பிறகு,  அவரது மனைவியும்,  பிரபல கல்வியாளருமான   ராஜலட்சுமி பார்த்தசாரதி நடத்தி வந்தார். பின்னர் அவரும் காலமானதை தொடர்ந்து தற்போது இதனை அவரது குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர்.

இதையும் பாருங்க : என்ன கருமத்தையா பேசி வச்சிருக்கா ? தற்போது சர்ச்சையை கிளப்பிய நண்பன் பட சிறப்பு நிகழ்ச்சியின் வீடியோ.

Advertisement

அதே போல வாக்குமூலம் அளித்த கைது செய்பட்ட ராஜகோபாலன், இது போல தான் 5 ஆண்டுகளாக செய்து வருவதாகவும் என்னை போல கரு கருப்பு ஆடுகள் பள்ளியில் இருப்பதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் PSBB பள்ளியை பலரும் விமர்சித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இதே பள்ளியில் பிரபல இயக்குனர் மனோகரனின் மகன் இறந்த சம்பவமும் தற்போது மீண்டும் நினைவுபடுத்தப்பட்டு வருகிறது.

“மாசிலாமணி’ மற்-றும் “வேலூர் மாவட்டம்’ உள்ளிட்ட படங்களையும் இயக்கியவர் இயக்குனர் மனோகர். மேலும், இவர் மிருதன், கைதி, டெட்டி போன்ற எண்ணெற்ற படங்களிலும் நடித்துள்ளார். இவரது மகன் ரஞ்சன் PSBB பள்ளியில் கடந்த 2012 ஆம் ஆண்டு நான்காம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி காலை பள்ளியில் உள்ள நீச்சல் குளத்தில் பயிற்சியில் ஈடுபட்ட போது நீரில் மூழ்கி பலியானார்.

Advertisement

இந்த சம்பவத்தின் போது நீச்சல் குளத்தில் 26 மாணவர்கள் பயிற்சி செய்து உள்ளனர். ஆனால், பள்ளியின் நீச்சல் பயிற்சியாளர்கள் டீ குடிக்க வெளியில் சென்று விட்ட போது மாணவர் ரஞ்சன் நீரில் மூழ்கி காலமாகிவிட்டதாக கூட செய்தி வெளியானது. மகன் இறந்த தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த ரஞ்சனின் பெற்றோர், மகனின் உ<டலை கண்டு கண்ணீர் விட்டு அழுதனர்.  இந்த சம்பவம் குறித்து பேசிய மகோனர், பயிற்சியின் போது, பயிற்சியாளர்கள் இல்லாத காரணத்தினால் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது என்று குற்றம் சாட்டி இருந்தார்

Advertisement

இந்த விவகாரத்தில் பள்ளியில் நீச்சல் பயிற்சியாளரான ராஜசேகர், அருண்குமார், ரவி மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர் ரவிச்சந்திரன் மற்றும் நீச்சல் குளத்தின் இன்சார்ஜ் ரங்காரெட்டி ஆகிய 5 பேரை கைது செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் பள்ளியில் இருந்த அந்த நீச்சல் குளத்திற்கு ம் சீல் வைத்து அவர்கள் இந்த சம்பவத்தின் போது ஜெயலலிதா இந்த விவகாரத்தில் தலையிட்டு பள்ளி நிர்வாகத்தை காப்பாற்றியதாக கூட அப்போது விமர்சனங்கள் கடுமையாக எழுந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement