என்ன கருமத்தையா பேசி வச்சிருக்கா ? தற்போது சர்ச்சையை கிளப்பிய நண்பன் பட சிறப்பு நிகழ்ச்சியின் வீடியோ.

0
13908
jeeva
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ வாரிசு நடிகர்கள் அறிமுகமாகி இருக்கின்றனர். அந்த வகையில் நடிகர் ஜீவாவும் ஒருவர். தமிழில் 2003 ஆம் ஆண்டு இயக்குனர் ரவி மரியா இயக்கத்தில் வெளியான ‘ஆசை ஆசையாய்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜீவா. இவர் பிரபல தயாரிப்பாளர் ஆர். பி சௌத்ரியின் மகன் என்பது நமக்கு தெரியும். நடிகர் ஜீவா நடித்த முதல் படம் அந்த அளவிற்கு ஒன்றும் வெற்றி பெறவில்லை. ஆனால், இவர் அமீர் இயக்கத்தில் நடித்த ‘ராம்’ படம் இவருக்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது என்றும் கூறலாம்.

-விளம்பரம்-

அதற்கு பின்னர்’டிஷும்,ஈ, கற்றது தமிழ்’ போன்ற படங்களில் வித்யாசமான கத்தபத்திரங்களில் நடித்து, தான் ஒரு சிறந்த நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார். அதே போல இவருக்கு விஜய்யுடன் ‘நண்பன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இயக்குனர் ஷங்கர் இயக்கிய இந்த திரைப்படம் இந்தியில் வெளியான ‘3 இடியட்ஸ்’ படத்தின் ரீ – மேக் தான் என்றாலும் தமிழிலும் இந்த படம் மாபெரும் வெற்றியடைந்தது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் ஜீவா பேசிய வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நண்பன் படத்தின் போது விஜய் டிவியில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பானது. இதில் கலந்துகொண்ட ஜீவாவிடம் பெண் ஒருவர், ஒரே படத்தில் 8 ஹீரோயின் நடிக்கிறார்கள். அந்த படத்தில் நீங்கள் ஹீரோவாக நடிப்பீர்களா இல்லை ஒரு படத்தில் வில்லனாக நடிப்பீர்களா என்று கேள்வி கேட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்த ஜீவா, வில்லனாக தான். ஏனென்றால் வில்லன்னா நிறைய பேர ரேப் பண்ணலாம் என்று கூறினார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பகிர்ந்த சிலர், ஒரு நடிகர் (ஒரு ஒழுக்கமான மனிதர் என்று நான் நினைத்தேன்) அவர் ஒரு வில்லனாக நடிக்க விரும்புகிறார், ஏனெனில் அவர் நிறைய பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய முடியும் என்று சொல்வதைக் கேட்பது என் வயிற்றுக்குள் புலியை கரைக்கிறது. இதில் மோசமான விஷயம் என்னவென்றால், அவரது சக நடிகர்களும் பார்வையாளர்களும் அவரை உற்சாகப்படுத்துகிறார்கள்! இதை பற்றி யாரும் இதுவரை ஏன் பேசவில்லை என்று என்னால் நம்ப முடியவில்லை என்று அவர் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

இந்த வீடியோவை பார்த்த பலர் இந்த வீடியோவை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாவதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் சென்னை கே கே நகரில் உள்ள PSBB பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து இருந்தார். மாணவிகள் அளித்த புகாரின் பெயரில் தற்போது அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement