40 ஆண்டுகளாக நாடக டீச்சர், 60 வயதில் முதல் வாய்ப்பு. சைக்கோ பட டீச்சரின் அறியாத பக்கம்.

0
6804
psycho-teacher
- Advertisement -

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான படம் “சைக்கோ”. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைத்ரி, நித்யா மேனன், ராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இசைஞானி இளைராஜா அவர்கள் படத்திற்கு இசை அமைத்து உள்ளார். சைக்கோ படம் திரை அரங்கில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் பார்வையில்லாத மாற்றுத் திறனாளி கதாபாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-
``அஜித், விஜய் படங்கள்ல இந்த ரோல் இருக்கவே இருக்காது!"- `சைக்கோ' ப்ரீத்தம்

- Advertisement -

இந்த படத்தில் ரேச்சல் எனும் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்தவர் ப்ரீத்தம். இந்த படத்தில் இவருடைய தனிப்பட்ட நடிப்பு மூலம் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். இந்நிலையில் இந்த சைக்கோ படம் குறித்து ப்ரீத்தமிடம் பேசும் போது அவர் கூறியது, நான் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக நாடகத்துறையில் இருக்கிறேன். தமிழ்நாட்டில் இருக்கிற நிறைய குழுக்களுடன் நான் நாடகங்கள் நடித்திருக்கிறேன். எனக்கு இப்போது 60 வயது ஆகிறது. என்னோட மொத்த குடும்பமும் நாடகத்தில் தான் இருக்கிறார்கள். நான் இப்போது ஐதராபாத்தில் ராமநாராயணன் ஃபிலிம் ஸ்கூலில் ஆசிரியராக பணிபுரிகிறேன்.

இதையும் பாருங்க : நடிகர் மோகன் லாலுக்கு இவ்வளவு பெரிய மகன் மற்றும் மகள் இருக்கிறார்களா. புகைப்படம் இதோ.

எனக்கு மத்தவங்களுக்கு நடிப்பு சொல்லிக் கொடுக்கிறது ரொம்ப பிடிக்கும். சைக்கோ படத்தில் இந்த வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுப்பதற்கு மிஸ்கின் சாருக்கு நான் ரொம்ப நன்றி தெரிவிக்கிறேன். அவர் என்னை பார்க்கும் போதே டீச்சர் கதாபாத்திரத்தில் நடிப்பீர்களா என்று கேட்டார். நானும் சரி பண்ணுகிறேன் என்று கூறினேன். நான் கதையை கேட்காமலேயே நேரடியாகச் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு போய்விட்டேன். பாண்டிச்சேரியில் தான் ஷூட்டிங் நடந்தது. என்னுடைய பகுதி நான்கு நாட்களில் முடித்து விட்டார்கள்.

-விளம்பரம்-
``அஜித், விஜய் படங்கள்ல இந்த ரோல் இருக்கவே இருக்காது!"- `சைக்கோ' ப்ரீத்தம்

ஏற்கனவே நான் நாடகங்களில் நடித்து இருந்ததால் கேமரா பயம் எல்லாம் எனக்கு இல்லை. டயலாக் பேப்பரை மட்டும் கையில் கொடுத்தார்கள் நானும் நடித்தேன். படத்தில் அதிதி கூடவும், வில்லன் கூடவும் தான் எனக்கு அதிக காம்பினேஷன் காட்சிகள் இருக்கும். இந்த படத்திற்காக என்னுடைய லுக்கை மிஸ்கின் அவர்கள் தான் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றினார். நான் நீளமான முடி வைத்திருந்தேன். ஒரு சின்ன விபத்தில் எனக்கு கை எலும்பு உடைந்து விட்டது. அதனால் தலை வார முடியாமல் முடியை வெட்டிக் கொண்டேன்.

இந்த லுக்கே மிஸ்கினுக்கு பிடித்து இருந்ததாலே படத்திலேயும் அப்படியே நடிக்க வைத்தார். அதோட எனக்கு சிகெரெட் பிடிக்கிற பழக்கம் இருக்கு. நிறைய பேர் என்னுடைய நடிப்பை பார்த்து பாராட்டினார்கள். என்னுடைய நடிப்பு இயல்பாக இருக்கு என்றும் சொன்னார்கள். இந்த எல்லா பெருமையும் இயக்குனர் மிஷ்கின் அவர்களுக்கு தான் சேரும் என்று ஆனந்தத்துடன் கூறினார்.

Advertisement