pubg விளையாட்டில் இப்படி ஒரு Cheating Technique இருக்கா? இத்தன நாள் இது தெரியாம போச்சே..!

0
1107
pubg
- Advertisement -

`Player’s Unknown Battle Ground’ என்பதைச் சுருக்கமாக, `PUBG’ என்று கூறுவர். போர்க்களத்தில், முகம் தெரியாத சிலருடன் அணியாக இணைந்து, எதிர்த்திசையில் உள்ளவர்களைத் தாக்க வேண்டும். இதுதான், அந்த விளையாட்டின் விதி. அட்டகாசமான கிராஃபிக்ஸ், பார்த்துப் பார்த்து உருவாக்கப்பட்ட தீவு, விதவிதமான ஆயுதங்கள், உடைகள், தப்பிக்க உதவும் குட்டிக் குட்டி ஐடியாக்கள் என உருவாக்கப்பட்டுள்ள PUBG விளையாட்டை விளையாடாதவர்கள் மிகவும் குறைவு என்றேதான் கூற வேண்டும்.

-விளம்பரம்-

விளையாடுபவர்கள் கூட கூட ஏமாற்றுவேலைகளில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே வந்தது. இதைப்போன்று ‘Cheats’ பயன்படுத்துபவர்களைத் தடுத்து நிறுத்த ஏற்கெனவே ஒரு ‘anti-cheat’ டிரைவ் ஒன்றை ரெடி செய்தது இந்த கேம்மின் வடிவமைப்பு குழு. இருப்பினும் மற்றும் சில தொழில்நுட்ப ஓட்டைகளைப் பயன்படுத்தி சிலர் ஏமாற்றிக்கொண்டுதான் இருந்தனர்.

- Advertisement -

இதனால் இன்னுமொரு மேம்பட்ட ‘anti-cheat’ டிரைவ் ஒன்றைச் சமீபத்தில் செயல்படுத்தியது. இது பிரபல ‘Radar Hack cheat’ முறையைக் கண்டறியவல்லது. இதை வைத்து இதைப் பயன்படுத்துவார்கள் யாரெனக் கண்டு அவர்களைத் தடைசெய்யமுடியும். இதுவரை 30,000-க்கும் மேற்பட்ட கணக்குகள் இப்படித் தடைசெய்யப்பட்டுள்ளது.

அது என்ன Radar Hack cheat? PUBG கேம்மில் 100 வீரர்களை ஒரு மேப்பில் இறக்கி ஆடவிடுவர். சாதாரணமாக கேம்மில் இருக்கும் மேப்பில் அந்த உலகம் எப்படி இருக்கிறது எதிரிகள் எங்கே இருக்கிறார்கள் என்பது போன்ற தகவல்கள் தெரியும். இந்த Radar Hack மூலம் மற்ற வீரர்கள் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ளமுடியும், மேலும் அவர்கள் இருக்கும் இடம் போன்றவற்றை இன்னொரு ஸ்மார்ட்போனிலோ, அல்லது இரண்டாவது டிஸ்பிளே ஒன்றிலும் பார்த்துக்கொண்டே எளிதாக ஆட உதவும் இது. 

-விளம்பரம்-
Advertisement