புதுப்பேட்டை பட நடிகர் மருத்துவ மனையில் அனுமதி. தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

0
2068
bala-singh
- Advertisement -

தென்னிந்திய திரைப்பட உலகில் முன்னணி நடிகராக விளங்கியவர் பாலா சிங். தற்போது பிரபல நடிகர் பாலா சிங்கின் உடல் நிலை மிக மோசமாக உள்ளது. மேலும், மருத்துவமனையில் இவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்: நடிகர் பாலா சிங் அவர்கள் மலையாள மொழி திரைப் படத்தின் மூலம் தான் சினிமா துறைக்குள் அறிமுகம் ஆனார். பின் இவர் குணச் சித்திர வேடத்தில் தான் அதிகம் நடித்தார். ஆனால், இவருக்கு தமிழ் திரை உலகின் மூலம் தான் மக்களிடையே அதிக வரவேற்பு கிடைத்தது. மேலும், தமிழில் நடிகர் நாசர் அவர்கள் எழுதி, இயக்கி, நடித்த “அவதாரம்” என்ற படத்தின் மூலம் தான் நடிகர் பாலா சிங் அறிமுகமானார். இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். மேலும், முதல் படத்திலே இவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர் இந்தியன், ராசி, உல்லாசம், சிம்மராசி, கன்னத்தில் முத்தமிட்டாள், தீனா, விருமாண்டி, சாமி, ஜிகிர்தண்டா, போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் குணச் சித்திர வேடத்திலும், வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-
Image result for actor bala singh rare photos"

- Advertisement -

மேலும், இந்த படங்களுக்கு பிறகு மக்களிடையே பரவலாக பேசப்பட்டார். இதனைத் தொடர்ந்து இவர் சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த என்.ஜி.கே படத்தில் நடித்து இருந்தார். மேலும், இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் வெகுவா பாராட்டப்பட்டது என்றும் சொல்லலாம். இதனைத் தொடர்ந்து நடிகர் பாலா சிங் அவர்கள் “சர்வம் தாளமயம்”, “சாமி ஸ்கொயர்”, “தானா சேர்ந்த கூட்டம்”, மகாமுனி என பிஸியாக பல படங்களில் நடித்துக் கொண்டு இருந்தார். அது மட்டும் இல்லாமல் இவர் வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டு திரைகளிலும் ஒரு கலக்கு கலக்கிக் கொண்டு இருந்தார். மேலும்,இவர் சின்னத்திரையில் சூலம், ருத்ரவீணை, நல்ல நேரம், ஆதிரா போன்ற பல தொடர்களில் நடித்து உள்ளார். மேலும், சினிமா நடிகர்கள்,சீரியல் நடிகர்கள் என பாரப்பட்சம் பார்க்காமல் நடிக்கும் நடிகர்.

மேலும், இவர் இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். இந்நிலையில் நடிகர் பாலா சிங்குக்கு தற்போது 67 வயது தான் ஆகிறது. இந்நிலையில் நடிகர் பாலாஜி கடந்த சில தினங்களுக்கு முன் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார். பின் திடீரென்று அவருக்கு மூச்சு திணறல் இவருக்கு ஏற்பட்டது. மேலும்,உடனே இவரை வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் குடும்பத்தினர் அனுமதித்தார்கள். இதனை தொடர்ந்து இவருக்கு தீவிர சிகிச்சையும் கொடுக்கப்பட்டது. மேலும்,நடிகர் பாலா அவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

-விளம்பரம்-
Image result for actor bala singh pudhupettai"

ஆனால்,இவரின் உடல் நிலை கவலைக் கிடமாக இருப்பதாக தகவல் வெளி வந்து உள்ளது. இதனால் ரசிகர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். மேலும், இவர் உடல் நிலை விரைவில் தேறி மீண்டும் திரும்பி வர வேண்டும் என ரசிகர்களும், திரை உலகமும் பிரார்த்தனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Advertisement