அனைத்து தளபதி ரசிகர்கள் சார்பாக மன்னிப்பு கேட்கிறேன் – குக்கு வித் கோமாளி புகழ் பதிவு

0
5116
Pugazh
- Advertisement -

விஜய் ரசிகர்களிடம் குக்க் வித் கோமாளி புகழ் மன்னிப்பு கேட்டிருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்தவர் புகழ். இவர் கடலூரை சேர்ந்தவர். இவர் 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்புடா என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் முதன் முதலாக புகழ் கலந்திருந்தார்.அதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

-விளம்பரம்-

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி தான் டாப் லிஸ்ட்டில் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பலரையும் மகிழ்வித்து தனெக்கென தனி ரசிகர் பட்டாளம் வைத்து இருப்பவர் புகழ். இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக இருந்தவர்கள் வெங்கடேஷ் பத் மற்றும் தாமு. இந்த நிகழ்ச்சி விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. தற்போது இந்த நிகழ்ச்சி மூன்று சீசன்களை கடந்து நான்காவது சீசன் சென்று கொண்டு இருக்கிறது.

- Advertisement -

புகழ் குறித்த தகவல்:

அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தது. இவர் சபாபதி என்ற படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து இவர் சமீபத்தில் அஸ்வின் நடிப்பில் வெளிவந்த என்ன சொல்ல போகிறாய் படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து புகழ் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இறுதியாக அஜித்தின் வலிமை, அருண் விஜயின் யானை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் போன்ற பல படங்களில் புகழ் நடித்து இருந்தார்.

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி:

தற்போது இவர் பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடித்த வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இவர் ஹீரோவாகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படி இவர் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் புகழ் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. தற்போது இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.

-விளம்பரம்-

நடிகர்கள் கெட்டப்பில் கோமாளிகள்:

இந்நிலையில் விஜய் ரசிகர்களிடம் புகழ் மன்னிப்பு கேட்டு இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இந்த வாரம் நிகழ்ச்சியில் கோமாளிகள் 1970 லிருந்து 2020 வரையிலான திரைப்படங்களில் நடித்த நடிகர்களின் கெட்ட பில் வந்திருக்கிறார்கள். அந்த வகையில் நடிகர் விஜய் கெட்டப்பில் வந்து இருக்கிறார். 2009 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் கில்லி.

புகழ் மன்னிப்பு கேட்க காரணம்:

இந்த படத்தில் விஜய் நடித்த கெட்டப்பில் தற்போது புகழ் நிகழ்ச்சியில் கலக்கி இருக்கிறார். இதனை அடுத்து இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அனைத்து தளபதி ரசிகர்கள் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தவறாக யாரும் நினைக்க வேண்டாம். அனைத்தும் கற்பனையே என்றும் பதிவு செய்திருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலருமே, விஜய் கெட்டப் உங்களுக்கு நன்றாக இருக்கிறது. அனைவரையும் ரசிக்க வைக்கிற அளவுக்கு இருந்தது என்று கமெண்ட் செய்து பாராட்டி வருகிறார்கள்.

Advertisement