விஜயகாந்தை போல் நானும் இதை செய்கிறேன் என்று குக் வித் கோமாளி புகழ் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வரலாகி வருகிறது.சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே விஜயகாந்த் குறித்த செய்தி தான். சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று இருந்தார். இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜயகாந்த் கடந்த வாரம் சிகிச்சை பலனின்றி காலமானார். மேலும், அவர் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள் .

விஜயகாந்த் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி இருந்தார்கள். ஆனால், சில பிரபலங்கள் வர வில்லை. விஜயகாந்தின் உடல் அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலும், விஜயகாந்தின் இறப்பு ஒட்டு மொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருக்கிறது.

Advertisement

அஞ்சலி செலுத்திய புகழ்:

இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு சென்று விஜயகாந்த் நினைவிடத்தில் தன்னுடைய அஞ்சலியை செலுத்தி இருக்கிறார். இவர் ஏற்கனவே விஜயகாந்த் மறைவிலும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த போது புகழ், கேப்டன் உடைய இறப்பிற்கும் நான் வந்திருந்தேன். கேப்டன் நிறைய பேருக்கு உதவிகள் செய்து இருக்கிறார். சாப்பாடு போடுவார் என்று பலரும் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம்.

புகழ் செய்த செயல்;

இப்போது நான் வந்திருப்பதற்கு காரணம், அவருக்காக என்ன செய்யலாம் என்று நான் யோசித்தேன். அதனால் தான் நான் என்னுடைய அலுவலகத்தில் தினமும் 50 பேருக்கு சாப்பாடு போட முடிவு செய்து இருக்கிறேன். என்னால் முடிந்தவரை செய்ய முயற்சி செய்கிறேன். இதை நான் 50 பேரிலிருந்து தொடங்குகிறேன். அதற்காக கேப்டனிடம் ஆசீர்வாதம் வாங்க வந்தேன். யாருக்காவது பசி, சாப்பாடு வேண்டுமென்று நினைத்தால் கே கே நகரில் உள்ள என்னுடைய ஆபீஸ்க்கு வந்து விடுங்கள் என்று பேசி இருக்கிறார். புகழின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Advertisement

புகழ் குறித்த தகவல்;

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்தவர் புகழ். 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்புடா என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் முதன் முதலாக புகழ் கலந்திருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று இருந்தாலும் இவரை மக்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி தான் டாப் லிஸ்ட்டில் இருக்கிறது.

புகழ் குடும்பம்;

இந்த நிகழ்ச்சியில் பலரையும் மகிழ்வித்து தனெக்கென தனி ரசிகர் பட்டாளம் வைத்து இருப்பவர் புகழ். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தது. அதிலும் 1947 படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மேலும், ஒரு சில படங்களில் இவர் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே புகழ், பேன்ஸி என்பவரை 5 வருடங்களாக காதலித்து வந்தார். பின் இவர்களுக்கு கடந்த வருடம் தான் திருமணம் ஆனது.

Advertisement