அவருக்கும் ஷேர் , Tax எல்லாம் போய் இவ்ளோ தான் கிடைச்சது – ‘எங்க சிரி பாப்போம்’ல 25 லட்சம் ஜெய்த்தது குறித்து புகழ்.

0
1965
lol
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களின் பேராதரவை பெற்றது. இதில் எத்தனையோ கோமாளிகள் வந்தாலும் புகழ் தான் பலரின் பேவரைட். குக் வித் கோமாளி-யின் நாயகன் என்று சொல்லுமளவுக்கு காமெடி மழை பொழிந்து தள்ளிய புகழுக்கு பல சினிமா வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இவர்  ’LOL: எங்க சிரி பாப்போம்’ எனும் காமெடி ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டார். அமேசான் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பான இந்த ஷோவை விவேக் மற்றும் மிர்ச்சி சிவா தொகுத்து வழங்கினார்கள். 

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சி தான் விவேக் பங்குபெற்ற கடைசி நிகழ்ச்சி என்பதால் இந்த ஷோவை பலரும் தேடி சென்று பார்த்தனர். நடிகர்கள் பிரேம்ஜி, சதிஷ், பவர்ஸ்டார் சீனிவாசன், டிவி பிரபலம் புகழ், நடிகை ஆர்த்தி உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் இதில் கலந்துக் கொண்டனர். சிரிக்காமல் இருக்க வேண்டும் என்பது தான் இந்நிகழ்ச்சியின் டாஸ்க்.

இதையும் பாருங்க : பாபா பாஸ்கர் மகளுக்கு நடந்த விஷேசம் – ஆஜரான குக்கு வித் கோமாளி பிரபலங்கள். செம கலக்கல் வீடியோ.

- Advertisement -

6 எபிசோடுகளாக ஒளிபரப்பான இந்த காமெடி ரியாலிட்டி சீரிஸ் கடந்த ஆகஸ்டு 27-ஆம் தேதியில் இருந்து ஒளிபரப்பானது. இந்த ஷோவில் அனைவரும் வெளியேறி நிலையில் கடைசியாக புகழ் மற்றும் அபிஷேக் ஆகிய இருவரும் டைட்டில் வின்னர்கள் என அறிவிக்கப்பட்டனர். இதனை அடுத்து புகழ் மற்றும் அபிஷேக் ஆகிய இருவருக்கும் தலா 25 லட்சம் பரிசு பணம் வழங்கப்பட்டது. 6 மணி நேரத்தில் ரூபாய் 25 லட்சம் சம்பாதித்தாரா என்று பலர் வாயடைத்து போனார்கள்.

இது குறித்து சமீபத்தில் நடந்த பேட்டியில் புகழ் ‘எங்க சிரி பார்ப்போம்’ நிகழ்ச்சியில் ஜெயித்தேன். அந்தப் பரிசுத் தொகையை இருவருக்குப் பிரித்துக் கொடுத்தார்கள். மொத்த பரிசுத் தொகை ரூ.25 லட்சத்தில் எனக்கு ரூ.12.5 லட்சம் வந்தது. அதில் டி.டி.எஸ் பிடித்ததுப் போக மீதி ரூ.7 லட்சம்தான் வந்தது. அனைத்துச் செய்திகளிலும் ரூ.25 லட்சம் ஜெயித்தேன் என்று போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். என் கைக்கு வந்தது ரூ.7 லட்சம் மட்டுமே. அதையுமே ஊரில் வீடு கட்டக் கொடுத்துவிட்டேன்.

-விளம்பரம்-
Advertisement