புனீத்தின் திடீர் மரணம், நின்றுபோன படங்கள் – சகோதரர் எடுத்துள்ள அதிரடி முடிவு.

0
826
puneeth
- Advertisement -

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் கடைசி படங்களின் ரிலீஸான அப்டேட்டுகள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கன்னட மொழியின் பவர்ஸ்டார் புனித் ராஜ்குமார் கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்த தகவல் ஒட்டுமொத்த திரையுலகிற்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கடைசியாக நடித்த ‘யுவரத்னா’ படம் மிகப்பெரிய அளவில் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. இப்படி ஒரு நிலையில் புனித் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

-விளம்பரம்-

பின் ஐசிவில் இருக்கும் புனித் ராஜ்க்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் காலமானார். இவருடைய இழப்பு ரசிகர்களும், பிரபலங்களும் பேரிடியாக இருந்தது. மேலும், அவரது உடலுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் பெங்களூரில் அஞ்சலி செலுத்த திரண்டிருந்தார்கள். இந்நிலையில் புனித் கடைசியாக நடித்த இரண்டு படங்களின் ரிலிஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இவர் கடைசியாக நடித்த படம் ஜேம்ஸ். மற்றொரு படத்தின் படப்பிடிப்பை முடித்த பின் இந்த படத்திற்கு டப்பிங் செய்யலாம் என்று புனித் இருந்தார். ஆனால், அவர் டப்பிங் செய்யவில்லை.

- Advertisement -

எனவே ஜேம்ஸ் படத்திற்கு புனித் அண்ணன் சிவராஜ்குமார் டப்பிங் பேச இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளன. மேலும், ஜேம்ஸ் திரைப்படத்தை புனித் ராஜ்குமாரின் பிறந்த நாளான மார்ச் 17ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதேபோல் புனித் நடித்த இன்னொரு படம் ‘கந்தட குடி’. இந்த படத்தை இயக்குனர் அமோகவர்ஷா இயக்கி இருக்கிறார். கர்நாடக கடற்பகுதியை பற்றிய ஆவணப்படமாக கந்தட குடி படம் உள்ளது. இந்த படத்தை புனித்தே தயாரிப்பதாகவும் கூறியிருந்தார். மேலும், இந்த ஆவணப் படம் புனித்தின் கனவாக இருந்தது. இந்த படமும் தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டு இருக்கின்றனர். ஏற்கெனவே ‘கந்தட குடி’ என்ற பெயரில் ராஜ்குமாரின் படம் ஒன்று 1973ல் வெளியானது.

Power Star' Puneeth championed the Rajkumar legacy | Deccan Herald

அதேபோல் 1994ல் சிவராஜ்குமார் ‘கந்தட குடி 2’ என்ற பெயரில் ஒரு அட்வெஞ்சர் படமொன்றில் நடித்து இருந்தார். அதேபோல் பவன் குமார் இயக்கத்தில் புனித் நடிப்பதாக இருந்த ‘த்வித்வா’ படத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற கேள்வியும் சினிமா ரசிகர்கள் எழுப்பி வருகிறார்கள். இதனை தொடர்ந்து புனித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படத்தை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் ஆனந்த் ராமை. இவரிடம் ரசிகர்கள் புனித் ராஜ்குமாரின் பயோகிராஃபி படத்தை எடுக்கச் சொல்லி கேட்டிருக்கின்றனர். அதற்கு அவரும் ‘I will try my level best to bring this idea on screen’ என்று ட்வீட் செய்திருந்தார். அதுமட்டுமில்லாமல் புனித் ராஜ்குமாரின் கேரியரிலேயே முக்கிய படமாக அமைந்த ‘ராஜகுமாரா’ என்ற படத்தை இயக்கியவரும் இவர்தான் என்பது குறிப்பித்தக்கது.

-விளம்பரம்-
Advertisement