பல கோடிகளுக்கு அதிபதி- ஆனால், இந்த குடிசை தான் புனீத்தின் நினைவு இல்லம் – என்ன காரணம் தெரியுமா ?

0
930
puneeth
- Advertisement -

புனித் ராஜ்குமாரின் பூர்வீக வீடு அவருடைய ஆசைப்படி நினைவு இல்லமாக மாறுகிறது என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கன்னட திரையுலகில் பவர்ஸ்டாராக கொடி கட்டி பறந்தவர் புனீத் ராஜ்குமார். கன்னட மொழியில் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் படையே உள்ளது. இவர் நடிகர் மட்டும் இல்லாமல் பாடகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகங்களில் பணிபுரிந்து இருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. இவர் கடைசியாக நடித்த ‘யுவரத்னா’ படம் மிகப்பெரிய அளவில் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் கடந்த வருடம் இவர் காலமான சம்பவம் ஒட்டுமொத்த திரைஉலகையும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், இவர் நடிகராக மட்டுமல்லாமல் 15 பள்ளிகளை நடத்தி அதில் அனைவருக்கும் இலவச கல்வியை கொடுத்திருக்கிறார். அதேபோல 16 முதியோர் இல்லங்கள், 19 கோசாலை போன்றவை தன்னுடைய சொந்தப் பணத்திலேயே மக்களுக்கு உதவி செய்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் 1800 மாணவர்கள் படிப்பதற்காக கல்வி வழிவகை செய்துள்ளார்.

- Advertisement -

புனித் ராஜ்குமார் செய்த உதவி:

இப்படி இலவச பள்ளிகள், அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் என கர்நாடக மக்களுக்காக இவர் பல்வேறு உதவிகளை செய்துள்ளார். அவ்வளவு ஏன் இறுதியாக அவர் இறந்த போது கூட அவர் கண்ணை தானாம் செய்துவிட்டு தான் சென்றார். இப்படி ஒரு நிலையில் புனித் ராஜ்குமாருக்கு பூர்வீக வீடு ஒன்று உள்ளது. பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமார் பிறந்த பூர்வீக வீடு ஒன்று காஜனனூர் என்ற கிராமத்தில் உள்ளது. மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு இந்த வீட்டிற்கு சென்று பார்வையிட்டு இருந்தார்.

புனித் ராஜ்குமாரின் பூர்விக வீடு:

மேலும், அங்குள்ள கிராம மக்கள், உறவினர்களுடன் பல மணி நேரம் பேசி இருந்தார். அதோடு இந்த வீட்டை ராஜ்குமாரின் நினைவு இல்லமாக மாற்ற வேண்டும். இங்கு அருங்காட்சியகம் ஒன்று தொடங்கப்பட வேண்டும் என்று தன்னுடைய விருப்பத்தை அவர் தெரிவித்திருந்தார். ஆனால், அவருடைய கனவு நினைவாகுவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டார். தற்போது இந்த வீடு பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கிறது. மேலும், புனித் ராஜ்குமாரின் ஆசைப்படி இந்த வீட்டை நினைவிடமாக மாற்றும் பணிகள் தொடங்கி உள்ளது.

-விளம்பரம்-

மும்முரமாக நடைபெறும் வேலைகள்:

உள்ளூர் கிராம வாசிகள் மூலம் இந்த வீட்டை அசல் வடிவத்திற்கும் மீட்டெடுக்க பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார்கள். தற்போது இந்த வீட்டினுடைய பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், ஓரிரு மாதங்களில் இந்த பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவராஜ்குமார் மற்றும் ராகவேந்திர ராஜ்குமார் ஆகியோர் விரைவில் கிராமத்திற்கு வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த பணிகளை செய்து வரும் ராஜ்குமாரின் மருமகன் கோபால் கூறியிருப்பது,

ராஜ்குமாரின் மருமகன் கோபால் கூறியது:

வீடு பரிதாபமாக இருப்பது மிகவும் வேதனைக்குரிய ஒன்றாக இருந்தது. இது கன்னடர்களின் நினைவில் பதிந்திருக்கும் பொன்னான நினைவுகளை கொண்டுள்ளது. பாரம்பரியமான தூண்கள் மற்றும் கூரை ஓடுகள் அப்படியே வைத்திருக்கிறோம். வேலை முடிந்ததும் டாக்டர் ராஜ்குமார், புனித் ராஜ்குமார் மற்றும் அவர்களது குடும்ப உறவினர்களின் அரிய புகைப்படங்கள் இங்கு வைக்கப்படும். கூடிய விரைவில் இந்த வீட்டிற்கான வேலைகளும் முடிவடையும் என்று கூறியிருக்கிறார்.

Advertisement