புன்னகை மன்னன் நடிகை ரேகா மகள் யார் தெரியுமா ! புகைப்படம் உள்ளே !

0
7076

80களில், இயக்குனர் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்டு முதல் படத்திலேயே பிரபலம் ஆன நடிகைகளில் ரேகாவும் ஒருவர். இவர் 1970ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர். இவருக்கு 16 வயது இருக்கும்போது சத்தியஜுடன் பாரதிராஜாவின் கடலோர கவிதைகள் படத்தில் ஹீரோயினாக நடித்தார் ரேகா.

rekha

இந்த படத்தில் நடிகை ரேகா ஜெனிபர் டீச்சர் என ஒரு கேரக்டரில் நடித்திருப்பார். இந்த டீச்சர் கேரக்டர் இன்று வரை பலரால் பேசப்படும் ஒரு கேரக்டராகும். தனது முதல் படத்திலேயே ஹிட் கொடுத்த ரேகா அதன்பின்னர் தென்னிந்திய மொழிகளில் ஒரு ரவுண்டு வந்தார்.

தமிழில் புன்னகை மன்னன், எங்க ஊரு பாட்டுக்காரன், நம்ம ஊரு நல்ல ஊரு, நினைவே ஒரு சங்கீதம், கதா நாயகன், என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, புரியாத புதிர் என பல ஹிட் படங்களில் நடித்தார்.

punnagai-mannan

1996ஆம் ஆண்டு ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார் ரேகா. ரேகாவின் கணவர் ஜார்ஜ் மீன் ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்த தம்பதிக்கு 1998ல் அனுஷா என்ற ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது.

அனுஷா தற்போது ஹிந்துஸ்தான் யூனிவர்சிட்டியில் படித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திய ரேகா 2002ல் இருந்து நடிகர்களின் அம்மா கேரக்டரிலும், சில சீரியல்களிலும் நடித்து வந்தார்.

Anusha

Anusha

மேலும்,கொடுமைகளுக்கு உள்ளாகும் பல பாமர மக்களுக்கு மலையாளத்தில் ஒரு பிரபல டீவியில் ஒரு ஷோ ஒன்றை நடத்தி வருகிறார். சென்னையில் 2015 வெள்ளத்தின் போது நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் இருந்தவர்களுக்கு பெரிதும் உதவி செய்துள்ளார் ரேகா. கடைசியாக முத்துராமலிங்கம் படத்தில் நடித்த ரேகா தற்போது நல்ல கதைக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.