தென்னிந்திய சினிமா உலகில் சமீபத்தில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் கோடிகளில் வசூலை குவித்து வருகிறது . இயக்குனர் சுகுமார் இந்த படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் அனுசியா உட்பட பலர் நடித்துள்ளனர். மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். மேலும், ஆந்திர பகுதியில் நடைபெறும் செம்மர கடத்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. அதோடு இந்த படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடித்து இருக்கிறார்.
இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகி உள்ளது. மேலும், இந்த படம் வசூலை வாரி குவித்து வந்தாலும் படம் குறித்து பல விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த படத்தில் இடம் பெற்ற சமந்தாவின் ஊ சொல்றியா மாமா என்ற பாடலும், ராஷ்மிகாவின் வாய்யா சாமி என்ற பாடலும் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
வைரலாகும் புஸ்பா பட வீடியோ:
இதற்கு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தில் இருந்து பல எதிர்ப்புகள் வந்திருந்தது. இப்படி ஒரு நிலையில் தற்போது மீண்டும் புஷ்பா படம் குறித்து விமர்சனம் எழுந்து வருகிறது. அது என்னவென்றால், புஷ்பா படம் விஜயகாந்தின் கேப்டன் பிரபாகரன் படத்தை காப்பியடித்து இருப்பதாக சோசியல் மீடியாவில் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். இயக்குனர் ஆர் கே செல்வமணி இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் கேப்டன் பிரபாகரன்.
கேப்டன் பிரபாகரன்:
இந்த படத்தில் விஜயகாந்த், சரத்குமார், ரம்யா கிருஷ்ணன், மன்சூரலிகான் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் விஜயகாந்தின் 100வது திரைப்படம். மேலும், இப்ராகிம் இராவுத்தர் இயக்குனர் ஆர் கே செல்வமணியிடம் புரட்சி கலைஞர் விஜயகாந்திற்கு நூறாவது திரைப்படம் இந்தி படம் ஷோலே போல மிரட்டலாக இருக்க வேண்டும். ஏனென்றால் பெரிய கதாநாயகர்களுக்கு 100 வது படம் சரியாக அமையாத காரணத்தால் இத்திரைப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என சொல்லி எடுக்கப்பட்ட படம்.
கேப்டன் பிரபாகரன்- புஸ்பா வீடியோ:
இதில் முக்கியமான விசயம் இசைஞானி இளையராஜாவின் மிரட்டலான பின்னணி இசை கோர்ப்பு இன்றும் கேட்க விரும்பும் பாடல்கள் என அனைத்திலும் பட்டையை கிளப்பிய படம் கேப்டன் பிரபாகரன். இந்நிலையில் கேப்டன் பிரபாகரன் படத்தின் காட்சியும், புஷ்பா படத்தின் காட்சியையும் வீடியோவாக ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்கள். அதில் இரண்டு படமுமே செம்மர கடத்தலை மையமாக கொண்ட கதை. புஷ்பா படத்தில் போலீஸ் அதிகாரியாக பகத் பாசில் நடித்திருந்தார். கேப்டன் பிரபாகரன் படத்தில் போலீசாக விஜயகாந்த் நடித்து இருந்தார்.
புஸ்பா படம் காப்பியா:
அதில் கேப்டன் பிரபாகரன் படத்தில் ஒரு காட்சியில் செம்மரக்கட்டைகளை ஆற்றில் போட்டு விடுவார்கள். அதேபோல் புஷ்பா படத்திலும் செம்மரக்கட்டைகளை ஆற்றில் வீசுவார்கள். இந்த இரு காட்சிகளையும் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பகிர்ந்து கேப்டன் பிரபாகரன் படத்தின் காப்பியா? புஷ்பா படம் என்று கேட்டு வருகிறார்கள். இதற்கு படக்குழுவினர் தரப்பில் இருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.