புஷ்பா பட நடிகரை போலீஸ் அதிரடியாக கைது செய்து இருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது. தெலுங்கு சினிமா வட்டாரத்தில் ஸ்டைலிஷ் ஸ்டாராக கலக்கி கொண்டு இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி இருந்த படம் புஸ்பா.
இயக்குனர் சுகுமார் தான் இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் அனுசியா உட்பட பலர் நடித்து இருந்தார்கள். மேலும், இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்தார். ஆந்திர பகுதியில் நடைபெறும் செம்மர கடத்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
புஸ்பா படம்:
அதோடு இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தது. அதிலும் இந்த படத்தில் இடம்பெற்ற ‘வாயா சாமி ‘ மற்றும் ‘ஹ்ம் சொல்றியா’ பாடல் தான் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்து மட்டும் இல்லாமல் கோடிக்கணக்கில் வசூல் செய்து இருந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் இரண்டு பாகமாக உருவாகி இருக்கிறது.
புஸ்பா 2 படம்:
மேலும், புஸ்பா 2 படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.
புஸ்பா 2 படத்தில் விஜய்சேதுபதி இருக்கின்றனர். சமீபத்தில் தான் இந்த இரண்டாம் பாகத்தின் உடைய படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் புஷ்பா பட நடிகர் கைதாகி இருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.
புஷ்பா பட நடிகர் செய்த வேலை:
அதாவது, புஷ்பா படத்தில் புஷ்பாவின் நண்பராக கேசவ் வென்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜகதீஷ். இவர் ஒரு பெண்ணை காதலித்து இருக்கிறார். அந்த பெண்ணும் இவரை நம்பி காதலித்து இருக்கிறது. பின் இவர் காதல் பெயரில் அந்த பெண்ணை ஏமாற்றி இருக்கிறார். இதனால் அந்த பெண் மனம் உடைந்து தன்னுடைய வீட்டிலேயே யாருக்கும் தெரியாமல் தற்கொலை செய்து இருக்கிறார்.
புஸ்பா பட நடிகர் கைது:
தற்போது இந்த சம்பவம் அந்தப் பெண் வீட்டின் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் போலீசார் நடிகர் ஜெகதீஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது இந்த தகவல் தான் தெலுங்கு சினிமா மாவட்டத்தில் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது.