குடும்ப ரசிகர்களை கருத்தில் கொண்டு புஷ்பா படத்தில் இருந்து ராஷ்மிகா காட்சிகள் நீக்கம் – இது தான் அந்த காட்சி.

0
907
rashmika
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களின் கனவு கன்னியாக நடிகை ராஷ்மிகா மந்தனா திகழ்ந்து வருகிறார். இவர் இன்கேம் இன்கேம் காவாலி என்ற ஒரே பாடல் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்தவர். இவர் கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் தான் திரையுலகிற்கு அறிமுகமானார். பின் நடிகர் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் ஜோடியாக தெலுங்கு மொழியில் அறிமுகமானார்.

-விளம்பரம்-

புஷ்பா முதல் பாகம் :

இந்த படம் பிளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார். அந்த வகையில் தற்போது தெலுங்கு சினிமா உலகில் ஸ்டைலிஷ் ஸ்டார் ஆக கலக்கி கொண்டிருக்கும் அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளிவந்த படம் புஷ்பா. இந்த படத்தை சுகுமார் இயக்கி உள்ளார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி உள்ளது.

- Advertisement -

மாபெரும் வெற்றி :

மேலும், இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து உள்ளார். இந்த படம் செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. அதோடு படத்தில் அல்லு அர்ஜுன் அவர்கள் லாரி டிரைவராக நடித்து இருக்கிறார். இந்த படத்தில் வில்லனாக பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் நடித்து இருக்கிறார். மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகி உள்ளது.

ராஷ்மிகா காட்சிகள் நீக்கம் :

இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தில் ஊ சொல்றியா என்ற ஐட்டம் பாடலுக்கு சமந்தா பயங்கரமாக நடனம் ஆடி இருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்த ஆபாச காட்சிகள் நீக்கி இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
நீக்கப்பட்ட காட்சி

புஷ்பா படத்தில் நடிகை ராஷ்மிகா அவர்கள் வாய்யா சாமி என்ற பாடலுக்கு பயங்கர கவர்ச்சியாக நடனம் ஆடி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அல்லு அர்ஜுனுடன் ராஷ்மிகா காருக்குள் நெருக்கமாக அமர்ந்து காதல் செய்யும் காட்சியும், ஆபாசமாக பேசும் வசனமும் இருக்கிறது. இந்த காட்சிகள் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைக்கிறது. இதனால் சோசியல் மீடியாவில் இதுகுறித்து பயங்கர சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.

குடும்ப ரசிகர்களை மனதில் கொண்டு நீக்கம் :

Rashmika Mandanna Hotness will be Talking Point.. ?

மேலும், பலரும் குழந்தைகளுடன் குடும்பத்துடன் இந்த படத்தை பார்க்க வருவதை தவிர்த்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் இருந்த சர்ச்சை காட்சிகளை படக்குழுவினர் நீக்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு இந்த வாய்யா சாமி பாடல் சமூக வலைத்தளங்களில் லட்சணக்கான பார்வையாளர்களை கடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாகவே நடிகை ராஷ்மிகா மந்தனா கவர்ச்சி காட்சியில் நடிப்பதும், கவர்ச்சியாக போட்டோஷூட் எடுப்பதும் என்று இருக்கிறார்.

Advertisement