பேப்பரை கிழித்து அவன் மூஞ்சியிலேயே தூக்கி எறிந்துவிட்டு வந்தேன்.! கொந்தளித்த புஷ்பவனம்.!

0
7750
Pushpavanam
- Advertisement -

சூப்பர் சிங்கர் செந்தில் மற்றும் ராஜலட்சுமி தான் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் லைம் லைட்டாக இருந்து வந்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களிடத்தில் ஏகோபித்த ஆதரவை பெற்றார்கள். தற்போது இவர்கள் சினிமாவிலும் கலக்கி வருகின்றனர்.

-விளம்பரம்-

- Advertisement -

பிரபல நாட்டுபுற பாடகர்களான புஷ்பனம் குப்புசாமி – அனிதா தம்பதியினர் சமீபத்தில் பேசிய வீடியோ ஒன்றில் நாட்டுப்புறப்பாடல் என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனம் பேசி, ஆபாசமாக மேடையில் ஆடிப்பாடும்  இளம்பாடகர்களை கண்டித்திருந்தனர். அவர்கள் செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி தம்புதியனரை தான் குறிப்பிடுகிறார்கள் என்று பரவலாக பேசப்பட்டது.

நாட்டுப்புறப்பாடலை தவறான பாதைக்கு அழைத்துச்செல்வோரை நான் கண்டிக்கிறேன்.  அவர்களுக்கு நான் அட்வைஸ் சொல்லவில்லை.  நான் கண்டிக்கிறேன். பாடுறாத இருந்தா பண்பாட்டோட பாடுங்க.  ஆடு.. இல்லேன்னா பாடு…. அது என்ன ஆடிக்கிட்டே பாட்டு….அப்படித்தான் ஆடுறியா அதை ஒழுங்காக ஆடுறியா… நான் செந்தில்கணேஷ் என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

-விளம்பரம்-

அறைக்குள் நடைப்பதை எல்லாம் அரங்கேற்ற முடியுமா? எங்கே தெருமுனையில் இரவில் நடத்திய கூத்தை எல்லாம் டிவியில் கொண்டு வர்றான்.  நான் பாடுனது 25 பாட்டுன்னா…பாடமாட்டேன்னு சொன்னது 75 பாட்டு இருக்கும்.  தொப்புளுக்கும் அதுக்கும் ஒரு சாண் தூரம் அதுக்குத்தான் அலையுறான் எல்லாரும் என்ற பாட்டை பாடச்சொன்னபோது அந்த பேப்பரை கிழித்து அவன் மூஞ்சியிலேயே தூக்கி எறிந்துவிட்டு வந்தேன்.

Advertisement