மூணு வருஷம்ன்னு சொல்லிட்டு 30 நாள்ல தூக்கிட்டங்கா – வேதனையில் புலம்பிய பிரபல சீரியல் நடிகை

0
132
- Advertisement -

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் சீரியல் நடிக்கும் நடிகர்களும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்கள். அந்த வகையில் சின்னத்திரையின் மூலம் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் சகானா. இவர் பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். தற்போது இவர் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் புதுப்புது அர்த்தங்கள் என்ற தொடரில் நடித்து இருக்கிறார். இந்த தொடரில் தேவயானி, பார்வதி, நியாஸ் உள்ளிட்டோர் இணைந்து நடித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

இந்த சீரியல் வெளியாகி குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் சகானா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த சீரியலில் இவருடைய கதாபாத்திரம் திடீரென முடிக்கப்பட்டிருக்கிறது. அதனால் கடைசி நாள் ஷூட்டிங்கில் அவர் இறந்த மாதிரி காட்சி எடுக்கப்பட்டது. ஆனால், அந்த காட்சியில் சகானா நடிக்க மறுத்து விட்டார். இதனால் சகானா இரண்டு நாட்கள் சூட்டிங்க்கு வரமுடியாது என்று சொல்லி வீட்டில் இருந்து விட்டார். பின் தயாரிப்பாளர் தரப்பில் என்னென்னவோ பேசி கடைசியில் எப்படியோ சமாதானப்படுத்தி சகானாவை வைத்து அந்த காட்சி எடுத்து முடித்தார்கள்.

- Advertisement -

சகானா அம்மா அளித்த பேட்டி:

இந்நிலையில் இது தொடர்பாக சகானாவிடம் பேட்டி எடுக்கப்பட்ட போது அவர் வருத்தத்தில் இருக்கிறார் என்று சொல்லி அவருடைய அம்மா தான் பேட்டி கொடுத்தார். அதில் அவர், புதுப்புது அர்த்தங்கள் சீரியல் இன்னும் மூணு வருஷம் வரைக்கும் போகும். மாதத்திற்கு 15 நாள்கள் நீங்கள் ஒதுக்கி வைத்து விடுங்கள். வேறு எந்தச் சீரியலையும் கமிட் செய்யாதீர்கள் என்று சொல்லி தான் சகானாவை நடிக்க கூப்பிட்டார்கள். ஆனால், 30 எபிசோடு தான் நடித்து இருக்கிறார். அதற்குள் அந்த கதாபாத்திரத்தை முடித்து விட்டார்கள். இது என்ன நியாயம் என்று எனக்கு தெரியவில்லை? குறைந்த நாட்களே கேரக்டர் இருக்கும் என்று சொல்லி கமிட் செய்திருக்களாம். சம்பளமாவது அதிகம் கேட்டு நடித்திருப்பார்.

சீரியலில் நீக்கம் குறித்து சொன்னது:

இப்ப அதுக்கும் வழி இல்லாமல் போய்விட்டது. இந்த மாதிரி ஏமாற்றலாமா? பின் இவரை அடுத்து சஹானாவின் நட்பு வட்டாரம் சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறியிருந்தது, முன்னணி சேனலில் பிரைம் டைம் சீரியல் என்ற ஆசையுடன் கமிட் ஆன சஹானாவுக்கு இது பெரிய ஏமாற்றம். திடீரென்று கதாபாத்திரத்தை முடிப்பார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அதனால் தான் இறந்து போன மாதிரி நடிக்க சொன்னார். அந்த கடைசி எபிசோடில் நடிக்க மாட்டேன் என்று சகானா சொன்னது நிஜம் தான். நியாயமாக யாருக்கும் வரக் கூடிய கோபம் தானே? பாலிடிக்ஸ் நடந்து இந்தக் கதாபாத்திரத்தை முடிச்சாங்களா? அல்லது கதைப்படி கொஞ்ச நாள்தான் வரக்கூடிய கதாபாத்திரமா? என்பது சம்பந்தப்பட்டவங்களுக்கு தான் தெரியும்.

-விளம்பரம்-

சகானா நண்பர்கள் அளித்த பேட்டி:

சகானாவுக்கு மட்டுமில்லை டிவியில் பலபேருக்கு இதுக்கு முன்னாடியும் இப்படி நடந்திருக்கிறது. வேறு சிலரோ நடிகை தேவயானிக்கு முக்கியத்துவம் குறைகிறது என்பதால் தான் இந்த கதாபாத்திரம் முடிவுக்கு வந்ததாகவும் கூறுகிறார்கள். கடைசி எபிசோடில் நடிக்க மறுத்ததால் அந்த காட்சிகளை எடுப்பதில் ரொம்பவே சிரமத்தை சந்தித்தது யூனிட். கடைசியில் தயாரிப்பாளர் தரப்பில் தான் அவரை சமாதானம் பேசி அடுத்த சீரியல்களில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் தருகிறோம் என சொல்லி ஒரு வழியாக நடிக்க வைத்தார்கள் என்று கூறி இருந்தார்கள்.

சீரியலின் இயக்குநர் அளித்த பேட்டி:

இதனையடுத்து இதுகுறித்து சீரியலின் இயக்குநர் ஷங்கரிடம் கேட்டபோது அவர் கூறியிருந்தது, ஏற்கனவே வேற ஒரு ஆட்டிஸ்ட் நடித்திருந்த கதாபாத்திரம் தான் அது. நான் தான் அந்த ஆர்டிஸ்ட்டை ரிபிளேஸ் பண்ணி சகானாவை கமிட்டி செய்தேன். நல்லாத்தான் பண்ணி இருந்தார்கள். ஆனால், கதைக்கு ஒரு முடிவு வரும் இல்லையா? அப்படித்தான் நடந்தது. கதைகளின் அடிப்படையில் தான் கதாபாத்திரத்தை முடிக்க வேண்டியதாகிவிட்டது. மற்றபடி வேண்டுமென்று முடிக்கவில்லை. கடைசி காட்சிகள் கூட பிரமாதமாக நடித்து கொடுத்தார் என்று கூறியிருந்தார்.

Advertisement