இந்த வேலைலாம் கேரளாவுல எடுபடாது’ – மம்மூட்டிக்கு எதிராகப் பதிவு. குரல் கொடுத்த அமைச்சர்கள்

0
154
Mamootty
- Advertisement -

மலையாள சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது நடிகர் மம்முட்டி தான். நடிகர் மம்முட்டி அவர்களின் உண்மையான பெயர் முகமது குட்டி. இவர் தன்னுடைய நடிப்பு திறனுக்காக தேசிய விருது மட்டும் நான்கு தடவைகள் வாங்கி உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் பத்மஸ்ரீ விருது கூட பெற்று இருக்கிறார். மேலும், இவர் 300 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இவர் மலையாளம், தமிழ், இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

இவர் தமிழில் ஆனந்தம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜூனியர் சீனியர், பேரன்பு என பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக மம்முட்டி நடிப்பில் வெளியாகி வந்த படம் பிரம்மயுகம். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதை அடுத்து மம்முட்டி நடிப்பில் வருகிற மே 23-ஆம் தேதி டர்போ என்ற படம் வெளியாக இருக்கிறது. இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் பாணியில் தான் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

மம்மூட்டி குறித்த தகவல்:

இதை அடுத்து நடிகர் மம்முட்டி அவர்கள் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் மம்முட்டி மீது மத சர்ச்சை தொடர்பாக எழுந்து இருக்கும் புகார் தான் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, கடந்த 2022 ஆம் ஆண்டு மம்மூட்டி நடிப்பில் வெளியான படம் PUZHU. இந்தப் படத்தில் மம்முட்டி அவர்கள் பிராமண சமூகத்தை சேர்ந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

PUZHU படம்:

இவருடைய தங்கையாக பார்வதி நடித்திருக்கிறார். மம்முட்டியின் தங்கை பார்வதி தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொள்வார். ஆனால், ஜாதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மம்மூட்டி தன்னுடைய தங்கையின் திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடியாமலும், அதை வெளியே காண்பிக்க முடியாமலும் இருக்கிறார். ஒரு கட்டத்தில் அவருடைய ஜாதி வெறி வெடித்து தன்னுடைய தங்கையின் கணவரையே கொலை செய்து விடுகிறார். இந்த படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டது.

-விளம்பரம்-

மம்மூட்டி குறித்த சர்ச்சை:

இப்படி இருக்கும் நிலையில் சிலர் இந்த படத்தில் மம்முட்டி பிராமண சமூகத்தை இழிவுபடுத்தி இருக்கிறார் என்றும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மம்முட்டி இந்து மதத்தை இழிவுபடுத்துகிறார் என்றெல்லாம் சோசியல் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் மம்முட்டியை, மம்மூட்டி முகமது குட்டி என்று ஹாஸ்டாக்கை குறிப்பிட்டு வைரலாக்கி வருகிறார்கள். இதற்கு பலரும் மம்மூட்டிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.

பிரபலங்கள் ஆதரவு:

அந்த வகையில் கேரளாவின் பொதுக் கல்வி மற்றும் தொழிலாளர் துறை அமைச்சரான வாசுதேவன் சிவன் குட்டி, இந்த வேலை எல்லாம் கேரளாவில் எடுபடாது. மம்முட்டி கேரளாவின் உடைய பெருமை என்று கூறியிருக்கிறார். இவரை அடுத்து கேரளாவின் வருவாய் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் ராஜன், மம்முட்டியை முகமது குட்டி என்றும் கமலை கமாலுதீன் என்றும் விஜய்யை ஜோசப் விஜய் என்றும் சொல்கிறார்கள். அதுதான் மதவாதிகள் உடைய அரசியல். ஆனால், கேரளா முற்றிலும் வேறுபட்டது. அவர்களுடைய மதவாத அரசியலுக்கு இங்கு இடம் இல்லை என்று கூறியிருக்கிறார்.

Advertisement