தலித்துக்கள் எந்த மாதிரி வீட்டில் வாழ்வார்கள் – 9 ஆம் வகுப்பு மாணவிக்கு Online வகுப்பில் கேட்கப்பட்ட கேள்வி.

0
917
naveen
- Advertisement -

சமுதாயத்தில் இருக்கும் ஜாதிகளை ஒழிக்க பலரும் பாடுபட்டு கொண்டிருக்கின்றனர் ஆனாலும் ஜாதிக் கொடுமைகள் ஜாதி கௌரவக் கொலைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் அசாமில் இருக்கும் ஒரு சர்வதேச பள்ளி நடத்திய ஆன்லைன் தேர்வில் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு கேட்கப்பட்டிருக்கும் கேள்விதான் தற்போது சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த கேள்வி என்னவென்றால், எந்த வகையான பொருட்களை பயன்படுத்தி தலித்துகள் வீட்டைக் கட்டுவார்கள் என்று அந்த கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

மேலும் அந்த கேள்வியின் கீழே செங்கல், சிமெண்ட் மற்றும் என்று களிமண் என்று 3 விதமான பதில்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது இப்படி ஒரு கேள்வி தனது மகளுக்கு தான் கேட்கப்பட்டது என்று அந்த மாணவியின் தாய் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவை பார்த்த ட்விட்டர் வாசி ஒருவர், எந்த ஒரு சிபிஎஸ்சி பள்ளியும் இப்படி தப்புத்தப்பாக கிராமர் தவறுகள் உடன் தேர்வுத் தாள்களை அனுப்ப மாட்டார்கள். எனவே, உதார் விடுவதை நிறுத்தி விட்டு அடுத்த முறை நல்ல போட்டோஷாப் செய்யுங்கள் என்று பதிவிட்டிருந்தார்.

- Advertisement -

அதற்கு பதில் அளித்தஅந்த 9 ஆம் வகுப்பு மாணவியின் அம்மா, ஆமா இது அஸ்ஸாம் ல இருக்குற KV school online class test கேட்கப்பட்ட கேள்வி தான். என் பொண்ணு எழுதினது. நான்தான் போஸ்ட் பண்ணினேன். இது fake இல்லை. Spelling mistakes க்கு காரணம் ஆசிரியர் capacity அவ்ளோதான் போலிருக்கு என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்த குறிப்பிட்ட கேள்வி கேட்கப்பட்ட அந்த புத்தகத்தில் இருக்கும் பக்கத்தின் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார் அந்த மாணவியின் அம்மா. அதில், “The story of Village Palampur” என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, பலம்பூர் என்ற கிராமத்தில் 450 பேர் வாழ்கின்றனர் அதில் 80 பேர் உயர் சாதிகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், உயர் சாதியினரிடம் தான் அங்கு இருக்கும் பெரும்பாலான நிலம் இருக்கும் என்றும், அவர்கள் தான் செங்கல் மற்றும் சிமெண்ட் வைத்து வீடுகளைக் கட்டுவார்கள் என்றும், அந்த கிராமத்தில் மூன்றில் ஒரு பகுதியாக வாழும் தலித்துகள் கிராமத்தின் ஒரு ஓரத்தில் வாழ்வார்கள் அவர்கள் சேற்றில் வீட்டைக் கட்டி வாழ்ந்து வருவார்கள் என்றும் அந்த பாடத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வர பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மூடர் கூடம் படத்தின் இயக்குனரும் நடிகருமான நவீன் கூறியுள்ளதாவது, இந்த கேள்வி மாணவர்களின் பிஞ்சு நெங்சங்களில் அவர்களுக்கு தெரியாமலே சாதிய நஞ்சை ஏற்றுவது. சக மனிதர்களுக்கு அநீதி நடக்கும்போது குரல் கொடுக்காமல் அமைதியாய் இருப்பதும் ஒருவகை வன்முறையே என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement