கயாத்திரியிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் கூறிய பதில்களும் !

0
2398

நேற்றைய நிகழ்ச்சியில் ஒரு சுவாரசியமான நிகழ்வு நடந்தது. மக்கள் போட்டியாளர்களிடம் கேட்க விரும்பிய கேள்விகளை புதிய போட்டியாளர்கள் பழைய போட்டியாளர்களிடம் கேட்டனர்.

அவ்வாறு கயாத்திரியிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அதற்கு கூறிய பதில்களும், ஆனால் உண்மையில் நிகழ்ந்தவை என்ன என்பதையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

kaajal-questions1. கேள்வி : மற்ற பெண்களை பற்றி எவ்வாறு தவறாக பேசமுடிகிறது, சுஜா வீட்டினுள் நுழைந்த உடனே அவரை பற்றி புறம் பேச ஆரம்பித்துவிடீர்கள். சினேகனுக்கு எதிராக  இப்போது ஆறவிடம் விஷத்தை விதைக்கிறீர்கள்.

கயாத்திரியின் பதில்: ஏற்கனவே எனக்கு சுஜா தெரிந்ததால நான் அப்படி சொல்லிட்டேன், ஆரவ் நான் poison பண்ணல இங்க நடக்கற விஷயத்தை சொல்றன். அவரை நான் poison பண்ணனும்னு அவசியம் இல்லனு சொன்னாங்க.

gaythiri aarav

உண்மை: சுஜாவை ஏற்கனவே தெரியும் என்றால் அவர் வந்த ஒடனே புறம் பேசுவது நியாயம் ஆகாதே.  கூட்டம் சேக்கறாரு பாரு, வாய தொறந்தா பொய், என்று அவர் ஆரவ்விடம் சினேகனை பற்றி பேசியது உண்மை.

gayathiri-biggboss

2. கேள்வி : காஜல் வந்ததும் ஏன் பிக் பாஸ் வீட்டை விட்டு போகணும் என்று சொன்னீங்க ?

கயாத்திரியின் பதில்: பிக் பாஸ் வீட்டை விட்டு போகணும்னு சொன்னது நீங்க வந்ததுனால இல்லை, ஆட்டோவை பார்த்த உடனே ஏறி புடிச்சு வீட்டுக்கு போயிறலாம்னு தோணுச்சு.

gayathiri
உண்மை: இந்த வாட்டி என்ன அனுப்பிச்ருருங்க இல்லின்னா நான் அழுதுருவன் அப்படினு கேமராவை பாத்து யாரு மாதிரியோ mimicryலாம் try பண்ணீங்க. வீட்டுக்கு வந்த அப்புறம் அந்த விடியோவை பாருங்க, அப்போ புரியும் நீங்க சொன்னது பொய் தான் என்று.

suja-biggboss

3. கேள்வி: கமல் சார் உங்கள correct பண்றது உங்களுக்கு புடிக்கலையா ?

கயாத்திரியின் பதில்: கண்டிப்பா கமல் சார் சொல்றது என் நல்லதுக்கு தான் சொல்வாரு. நான் ஒரு குழந்தை மாதிரி (யாரும் சிரிக்க வேண்டாம்), முதலில் அடம் பிடிப்பேன் அப்புறம் தான் கேப்பேன். கமல் சார் சொன்னா நான் 100% கேப்பன்.

gayathiri

உண்மை: மூணு வாரமா நீ கெட்ட வார்த்தை பேசுற கெட்ட வார்த்தை பேசுறன்னுற மாதிரி image எனக்கு தேவையேயில்லை. கமல் சார் வந்து கேக்குற கேள்விகள் எல்லாம் எனக்கு discouraging’ah இருக்கு. என்னை correct பண்றதுக்கு எங்க அம்மாக்கு மட்டும் தான் உரிமை இருக்கு. இது தான் காயத்திரி கூறியது, ஆக இந்த கேள்விக்கும் பொய் தான் பதில்.

gayathiri-raiza

4. கேள்வி: Hair என்பது கெட்ட வார்த்தை இல்லை என்றால், அந்த வார்த்தையை நான் உங்களை திருப்பி சொல்லலாமா  ?

கயாத்திரியின் பதில்: நீ என்ன பெரிய அப்படக்கரா என்று சொல்வதற்கு பதிலா hairனு சொல்லிட்டேன் கோவத்துல.

gayathiri biggboss

உண்மை: நீங்கள் hair என்று கூறிய ஒவ்வொரு இடத்திலும் உங்களது சுயரூபம் வெளிப்பட்டது. அதை சமாளிப்பதற்காக இப்போது நீங்கள் என்ன வேண்டும் என்றாலும் பேசலாம். அதுமட்டுமல்லாமல் உங்களது நலன் கருதி பல முறை நீங்கள் பேசிய கெட்ட வார்த்தைகளை ஒளிபரப்பாமல் இருந்திருக்கிறார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே.

harish-kalyan-biggboss

5. கேள்வி: மத்தவங்க advice பண்ணா உங்களுக்கு புடிக்காது ஆனா நீங்க ஏன் மத்தவங்களுக்கு advice பண்றீங்க ?

கயாத்திரியின் பதில்: நான் யாருக்குமே advice பண்ணது இல்லை. ஒருத்தருக்கு கூட நீங்க இப்படி இருக்கணும் அப்படி இருக்கணும்னு advice பண்ணதே இல்லை.

julie

உண்மை: வீட்டிற்க்கு வந்த அப்புறம் hotstarல உங்க விடீயோவைலாம் ஒரு தடவ பாருங்க. இந்த வீட்ல யாருக்காவது நீங்க அறிவுரை சொல்லாமல் மறந்து விட்டுட்டு இருந்தீங்கனா தயவுசெய்து அலைபேசி மூலம் adivice பண்ணிருங்க. ஏன்னா நீங்க adivice பண்ணாத ஆளே வீட்டில் இல்லை என்பது தான் உண்மை.

gayathiri

6. கேள்வி: ஆனா ஊனா செஞ்சுருவன் கை கால் உடைச்சுருவன்னு சொல்றீங்களே நீங்க dance மாஸ்டரா இல்ல ரௌடியா ?

கயாத்திரியின் பதில்: நான் மாஸ் படம் பார்த்து வளந்து இருக்கன். கை கால் உடைப்பன் அந்த slangலாம் மாஸ் படத்துல இருந்து கத்துக்கிட்டேன். அது எனக்கு ரொம்போ புடிக்கும் அதனால அடிக்கடி எனக்கு வரும்.

gayathiri-raiza-arav

உண்மை: அப்போ இதுக்கு எல்லாம் காரணம் சூர்யா நடிச்ச மாஸ் படம் தான்னு சொல்றீங்க. ஏம்மா உங்களுக்கே இதெல்லாம் ஓவரா தெரியலையா.

ஒரு கேள்விக்கு கூட உண்மையான பதில் வரவில்லை என்பது தான் உண்மை. இது தான் எங்களது குறும்படம் ஆனால் எழுத்து வடிவில்.