தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. அந்த வகையில் தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் சூர்யா நடிக்கிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் இருவரும் இணைந்து இருக்கிறார்கள்.

இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் சுவாசிகா, ஷிவிதா, யோகி பாபு, நட்டி சுப்பிரமணியம், மலையாள நடிகை இந்திரன்ஸ், மன்சூர் அலிகான் உட்பட பலர் நடிக்கிறார்கள். தற்போது இந்த படத்திற்கான வேலைகள் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. மேலும், இந்த படத்தினுடைய ரிலீஸ்க்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த படம் மே 14ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.
கருப்பு படம்:
இன்று கருப்பு படம் வெளியாகுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படம் ரிலீஸ் ஆகுவதில் சிக்கல் இருப்பதாக நேற்று இயக்குனர் ஆர் ஜே பாலாஜி இயக்குனர் சொன்னார். அதில், எனது அன்புக்குரிய ரசிகர்கள் தற்போது சூழல் குறித்து என்னிடம் உறுதியான பதில் எதுவும் இல்லை. பிரச்சனைகளை தீர்க்க தயாரிப்பாளர்கள் தங்களால் இயன்றவரை முயற்சி செய்து வருகிறார்கள். இந்த படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே பல தடைகள் வந்திருக்கிறது. ஆனால், ஏதோ ஒரு வகையில் கடவுள் அந்த தடைகள் எல்லாம் கடக்க வைத்து 32 மாதங்களுக்குப் பிறகு இன்று நம்மை இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்.

ஆர் ஜே பாலாஜி பேட்டி:
இந்த முறையும் அவர் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. கருப்பன் எல்லா தடைகளையும் அடித்து உடைப்பான். கருப்பு நாளைக்கு காலையில் சரியாக ரிலீஸ் ஆகும் நம்பிக்கை வையுங்கள் நடக்கும் என்று கூறியிருந்தார். இயக்குனர் போட்ட பதிவை தொடர்ந்து சில மணி நேரங்களிலேயே எஸ் ஆர் பிரபு படத்தினுடைய முதல் காட்சி ரத்து செய்யப்படுவதாக சோசியல் மீடியாவில் அளித்திருந்தார். இப்படி இருக்கும் நிலையில் ஆர்.ஜே பாலாஜி கண்கலங்கி பேசிருக்கும் வீடியோ தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது அதில் அவர், காரில் இருந்து நான் கொடுக்கக்கூடிய கடைசி அப்டேட் இதுதான் என்று நினைக்கிறேன். என்னை மன்னித்துவிடுங்கள், இது நடந்திருக்கக்கூடாது. படத்தை பார்ப்பதற்காக பலதூரம் பயணித்து வந்த ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்.
https://www.youtube.com/watch?v=kG_AJ04Bkfg
ரிலீஸ் பற்றி சொன்னது:
படம் பார்க்கிறதே, நம்ம மனசுல, வீட்ல இருக்கிற, வாழ்க்கையில் இருக்கிற பிரச்சினை இருந்து வெளியே வருவதற்கு தான். ஆனால், அந்த படம் பார்ப்பதற்கு அவ்வளவு மன அழுத்தம் கொடுத்தால் அவ்வளவு தூரம் டிராவல் பண்ணி அதுவும் பார்க்க முடியாத போனால் ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது. என்னை மன்னித்து விடுங்கள் நானும் இதை எதிர்பார்க்கவில்லை. நான் நம்பிக்கையோடு இருக்கேன் இன்னைக்கு மாலை 6:00 மணியிலிருந்து இந்த பிரச்சனை எல்லாம் முடிந்து படம் ரிலீஸ் ஆகும் என்று நம்பினேன். எனக்கு ரொம்ப அழுகையாக வருகிறது, வலிக்கிறது. கடவுள் இதைக் கடத்தி இந்த படத்தை இன்னைக்கு மாலையில் ரிலீஸ் பண்ணி கொடுப்பாரு. தாமததிற்கு மன்னிக்கவும் காத்திருப்பதற்கு ஒர்த்தானதாக இந்த படம் இருக்கும். படம் நல்லா இருக்கும் உங்களுக்கு பிடிக்கும்னு நம்பிக்கை என்று கூறியிருக்கிறார்.






