ராஜ ராஜ சோழன் இந்து கிடையாதுன்னு சொல்றது எப்படி இருக்குன்னா பாரதி, காந்தி எல்லாம் – சீரியல் நடிகர் ராகவ் வெளியிட்ட வீடியோ.

0
524
vetrimaran
- Advertisement -

இயக்குனர் வெற்றிமாறன் கூறிய கருத்துக்கு கமலஹாசன் கொடுத்திருக்கும் விளக்கம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர் மணிரத்தினம். இவர் எப்போதும் வித்யாசமான படங்களை இயக்கி உலகிற்கு கொடுப்பதில் கைத்தேர்ந்தவர். பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக இயக்குநர் மணிரத்னம் இயக்கி இருக்கிறார். இந்த கதையை பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

ஆனால், அதை மணிரத்னம் தான் சாதித்து காட்டி இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரை வாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது. மேலும், தமிழ் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் உலக சினிமா ரசிகர்களும் பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடி வருகின்றனர். அதோடு படம் வெளியாகி மூன்றே நாட்களில் 200 கோடிக்கு மேல் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

- Advertisement -

வெற்றிமாறன் அளித்த பேட்டி:

இது ஒரு பக்கம் இருக்க, படத்தின் நாயகன் ராஜராஜ சோழன் குறித்து விக்ரம் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்து இருந்தார். அதிலிருந்து ராஜராஜ சோழன் குறித்த சர்ச்சை சோசியல் மீடியாவில் எழ ஆரம்பித்தது. பின் இயக்குனர் வெற்றிமாறன் சமீபத்தில் விழா ஒன்றில், சினிமா என்பது வெகுமக்களை மிக எளிய முறையில் சென்றடைய கூடிய ஒரு கலை வடிவம். சினிமாவை அரசியல் மயமாக்குவது கலை முக்கியம். மக்களுக்காக தான் கலை. மக்களை பிரதிபலிப்பது தான் கலை. இந்த கலையை சரியாக இன்று நாம் கையாள வேண்டும்.

வெற்றிமாறனின் சர்ச்சை பேச்சு:

வள்ளுவருக்கு காவி உடை கொடுக்கப்படுவதாக இருக்கட்டும், ராஜராஜ சோழன் ஒரு இந்து அரசனாக்குவது இருக்கட்டும் என்று பல அடையாளங்களை நம்மிடம் இருந்து எடுத்துக் கொண்டு வருகிறார்கள். இது சினிமாவிலும் நடக்கும் என்று பேசி இருந்தார். வெற்றிமாறனின் இந்த பேச்சு சமூக வலைதளத்தில் தற்போது விவாதம் ஆகியிருக்கிறது. வெற்றிமாறன் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

-விளம்பரம்-

கமலின் கருத்து :

வெற்றிமாறன் கருத்து குறித்து பேசிய கமல் ”ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் என்ற பெயரே கிடையாது. சைவம், வைணவம், சமணம் போன்ற சமயங்கள் தான் இருந்தது. இந்து என்பது ஆங்கிலேயர்கள் வைத்த பெயர்.இங்கு மதங்கள் வெவ்வேறாக இருந்தது. இதையெல்லாம் எட்டாம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் ஷண்மத ஸ்தாபனம் என்று கொண்டு வந்தார்கள். இவை எல்லாம் வரலாற்றில் உள்ளவை. ஆனால், இந்த திரைப்படம் ஒரு வரலாற்று புனைவு. நாம் சரித்திரத்தை புனைய வேண்டாம். திரிக்க வேண்டாம், மொழி அரசியலை திணிக்க வேண்டாம். நல்ல கலைஞர்களை கொண்டாடுவோம் என்று கூறியிருந்தார்.

ராகவ் வெளியிட்ட வீடியோ :

இந்த நிலையில் வெற்றிமாறன் கருத்து குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள சீரியல் நடிகர் ராகவ் ”ராஜராஜ சோழன் ஒரு இந்து கிடையாது. ஏனென்றால் அவர் பிறந்த காலகட்டத்தில் இந்து என்ற ஒரு மதமே இல்லை என்று சொல்வது எப்படி இருக்கிறது என்றால், பாரதியார், மகாத்மா காந்தி இவர்களெல்லாம் இந்தியர்களே கிடையாது. அவர்கள் எல்லாம் பிரிட்டிஷ் அரசின் குடிமகன்கள். ஏனென்றால் இவர்களெல்லாம் பிறந்த போது இந்தியா என்ற ஒரு நாடே கிடையாது. 1947 க்கு பின்னர் தான் அதுவே உருவானது. என்று கூறிஇருக்கிறார்.

Advertisement