தியேட்டரில் டிக்கெட் விற்ற ரஷி கண்ணா. குவிந்த கூட்டம். வைரலாகும் புகைப்படம் இதோ.

0
1173
Rashi-khanna
- Advertisement -

படத்தின் பிரமோஷனுக்காக தியேட்டரில் டிக்கெட் பெற்ற பிரபல நடிகை. இதனால் தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. தற்போது வளர்ந்து வரும் சினிமா உலகில் மாஸ் ஹீரோ, ஹீரோயினி வைத்து அசத்தலான கதை, சூப்பர் லொக்கேஷன் என எல்லாம் வைத்து படம் எடுத்தால் அந்தப் படத்தை ஓட வைக்க படக்குழுவினர் படும் பாடுதான் படாதபாடு. இதையெல்லாம் விட படத்தை ஓட வைக்க ப்ரோமோஷன், மார்க்கெட்டிங் பல டெக்னிக்கல் விஷயங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என எல்லா பிரிவில் உள்ள சினிமா உலகமும் பின்பற்றும் ஒரே விஷயம் இந்த ப்ரமோஷன் டெக்னிக் தான். அந்த வகையில் தற்போது தெலுங்கில் படத்தின் புரமோஷனுக்காக பிரபல நடிகை செய்த செயல் ரசிகர் மத்தியில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-விளம்பரம்-
Image

- Advertisement -

தெலுங்கில் முன்னணி இயக்குனராக இருப்பவர் மாருதி. பலே பலே மகாதிவோய், மஹாணுபவது போன்ற குடும்ப படங்களை இயக்கிய சூப்பர் ஹிட் இயக்குநர் மாருதி அவர்கள் “பிரதி ரோஜு பண்டகே” என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் கதாநாயகனாக சாய் தரம் தேஜ் நடித்து உள்ளார். இவருக்கு ஜோடியாக பிரபல நடிகை ராசி கண்ணா நடித்து உள்ளார். ஹீரோவுக்கு தாத்தாவாக நடிகர் சத்யராஜ் நடித்து உள்ளார். ‘பாகுபலி கட்டப்பா’ படத்திற்குப் பிறகு தெலுங்கில் சத்யராஜ் அவர்கள் இந்த படத்தில் நடித்து இருக்கிறார். ஹீரோவுக்கு டப் கொடுக்கும் விதமாக சத்யராஜ் போட்ட ஆட்டம் அனைவரையும் கவர்ந்திழுத்தது. இவர்களுடன் இந்த படத்தில் விஜய் குமார், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சத்யம் ராஜேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். காதல், பாசம், சண்டை, காமெடி என எல்லாம் கலந்த கமர்ஷியல் படமாக இருக்கும் என கூறுகிறார்கள்.

இதையும் பாருங்க : அஜித் ஓட்டிய அதே ரேஸ் பைக்கை ஒட்டிய நடிகை பிரியா பவானி சங்கர். வைரலாகும் வீடியோ.

அதோடு தாத்தா– பேரன் இடையேயான உறவைப் பற்றி பேசும் படமாக உருவாகி உள்ளது. பிரபல தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் அவர்கள் இந்த படத்தை தயாரிக்கிறார். மேலும், இந்த படத்தின் போஸ்டர் மற்றும் ட்ரெய்லர் எல்லாம் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் நாளை வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்தார்கள். இந்நிலையில் இந்த படத்தின் புரமோஷனுக்காக நடிகை ராசி கண்ணா அவர்கள் ஐதராபாத்தில் உள்ள கோகுல் தியேட்டரில் டிக்கெட் விற்றுள்ளார். இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் தியேட்டரில் குவிந்து ஆரவாரம் செய்து வந்தனர்.

-விளம்பரம்-

அதோடு படத்தின் டிக்கெட்டுகளும் விற்பனை ஆனது. மேலும், படத்தின் பிரமோஷனுக்காக நடிகை ராசி கண்ணா அவர்கள் செய்த செயல் வீடியோ மற்றும் புகைப்படங்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் தான் நடிகை க்ரிட்டி சனோன் அவர்கள் தன்னுடைய படத்தின் புரமோஷனுக்காக இந்த மாதிரி செயலை பாலிவுட்டில் செய்து இருந்தார். லக்ஷ்மன் உதேகர் இயக்கத்தில் கார்த்திக் ஆர்யன், க்ரிட்டி சனோன் நடித்த “லுக்கா சுப்பி” படம் ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது நடிகை க்ரிட்டி சனோன் செய்த செயலை தென்னிந்தியாவில் நடிகை ராசி கண்ணா செய்து வருகிறார்.

Advertisement