அஜித் ஓட்டிய அதே ரேஸ் பைக்கை ஒட்டிய நடிகை பிரியா பவானி சங்கர். வைரலாகும் வீடியோ.

0
51522
- Advertisement -

முன்பெல்லாம் நடிகர்கள் வெள்ளி திரையில் இருந்து தான் சின்னத்திரைக்கு இடம் பெயர்வார்கள். ஆனால், தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு செல்லும் நடிகர்கள் தான் அதிகம் உள்ளார்கள். இப்படி சென்றவர்கள் தான் சந்தானம், சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர். மேலும், இவர்கள் சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு சென்று பல படங்களில் நடித்து பல சாதனைகள் புரிந்து வருகிறார்கள். அந்த வகையில் வந்தவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். நடிகை பிரியா பவானி சங்கர் அவர்கள் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடு துறையில் பிறந்தவர்.

-விளம்பரம்-

இவர் இவர் முதன் முதலில் சாஃப்ட்வேர் என்ஜினியராக தான் பணியாற்றினார். பின் மீடியா மீது இருந்த அதிக ஆர்வம் காரணத்தினால் தொலைக் காட்சியில் செய்தி வாசிப்பாளராக தன் பயணத்தைத் தொடங்கினார். பின்னர் இவர் விஜய் தொலைக் காட்சியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற சீரியலில் நடித்தார். இந்த சீரியலில் இவர் ஒரு குழந்தைக்கு தாய் கதாபாத்திரத்தில் நடித்தார். இதன் மூலம் ஒட்டு மொத்தமாக ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான ‘மான்ஸ்டர்’ படம், கார்த்திக் நடித்த “கடைக்குட்டி” சிங்கம் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார். தமிழ் சினிமா உலகில் இளம் ரசிகர்களை கவர்ந்த நடிகைகளில் ஒருவர் நடிகை பிரியா பவானி சங்கர்.

இதையும் பாருங்க : பேஷன் என்ற பெயரில் மீண்டும் கன்றாவியான ஹேர் ஸ்டைலுக்கு மாறிய ஓவியா. கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

- Advertisement -

இந்நிலையில் நடிகை ப்ரியா பவானி ஷங்கர் அவர்கள் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் தன்னுடைய ஆண் நண்பரின் சூப்பர் பைக் ஒன்றை ஓட்டுகிறார். மேலும், அந்த வீடியோவில் Ducati 1299 Panigale என்ற 1285 சிசி திறன் கொண்ட பைக்கை தான் நடிகை பிரியா பவானி ஷங்கர் ஓட்டி இருக்கிறார். அந்த விடியோவை ஒன்றரை லட்சத்திற்கும் மேல் பார்வையாளர்கள் பார்த்து லைக்குகளை குவிந்து வருகின்றன. அதோடு அந்த வீடியோவை ரசிகர்கள் அதிகமாக சேர் செய்தும் வருகின்றனர். மேலும், அவருக்கு பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்த பைக்கை அஜித் ஒரு படத்தில் ஒட்டி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வரும் வாய்ப்புகள் பிரியா பவானி சங்கருக்கு உள்ளது என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். நடிகை பிரியா பவானி ஷங்கர் தற்போது அதர்வாவிற்கு ஜோடியாக கமிட் ஆகி உள்ளார். மேலும், இவர் சங்கரின் “இந்தியன் 2” படம், நடிகர் எஸ்.ஜே. சூர்யாவுடன் இணைந்து ‘பொம்மை’ என்ற படத்தில் நடித்து வருவதாக தெரிய வந்துள்ளது. இவர் இந்தியன் 2 படத்தில் வயதான பாட்டியாக அதாவது முதல் பக்கத்தில் சுகன்யா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து களத்தில் சந்திப்போம், விக்ரம் 58வது படம், மாஃபியா அத்தியாயம்-1, கசடதபற, குருதி ஆட்டம் போன்ற பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்துக் கொண்டு இருக்கிறார் நடிகை பிரியா பவானி சங்கர்.

-விளம்பரம்-

Advertisement