திருமணத்திற்கு பின் கணவர் விதித்த கட்டுப்பாடு – முதல் முறையாக கூறிய ரக்ஷிதா. இது தான் பிரிவிற்கு காரணமா ? வீடியோ இதோ.

0
1017
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் ரக்ஷிதா, குடும்பம் மற்றும் திருமணம் குறித்து பேசி இருக்கிறார். சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகை ரக்ஷிதா. இவர் கர்நாடகாவை சேர்ந்தவர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற டிவியில் மூலம் தான் தமிழக மக்கள் மத்தியில் அறிமுகம் ஆகி இருந்தார். இதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து இருந்தார். அதன் பின் இவர் சின்னத்திரையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்து சமீபத்தில் முடிவடைந்த நாம் இருவர் நமக்கு இருவர் 2 என்ற சீரியலில் மகா என்ற கதாபாத்திரத்தில் ரக்ஷிதா நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

ஆனால், இந்த தொடரில் இருந்து இவர் திடீரென்று விலகிவிட்டார். ரஷிதாவிற்கு சீரியல் நடிகர் தினேஷ் என்பவருடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆனது. ஆனால், இவர்களுக்கு குழந்தைகள் எதுவும் இல்லை. இப்படி ஒரு நிலையில் ரக்ஷிதா தன் கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்கிறார் என்று சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. இது குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். அதிலும் குறிப்பாக ரஷிதாவிற்கு குழந்தை இல்லை என்பதால் தான் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு திருந்தி விட்டார்கள் என்று ஒரு சிலரும் தினேஷிற்கு சமீப காலமாக சீரியலில் வாய்ப்பு இல்லாததால் தான் ரஷிதா அவரை பிரிந்து விட்டார் என்றும் கூறிவந்தனர்.

- Advertisement -

ஆனால், தங்கள் விவாகரத்து சர்ச்சை குறித்து பேசிய தினேஷ், கணவன், மனைவி இடையிலான சண்டை நடந்தால் ஒரு சிலர் ஒரே வீட்டில் இருந்துகொண்டே ஒருத்தருக்கு ஒருத்தர் பேசாமல் இருப்பார்கள். சிலர் கொஞ்சநாள் தனித்தனியாக இருப்போம் என்று முடிவெடுப்பார்கள். என்னை பொறுத்தவரைக்கும் எங்கள் இடையிலான பிரிவு தற்காலிகமானதுதான். மற்றபடி நான், ரக்ஷிதா இருவரும் ஒரு சட்ட பூர்வமாக பிரிவதற்கான எந்த ஒரு முயற்சியையும் இந்த நிமிஷம் வரைக்கும் எடுக்கவில்லை என்று கூறி இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் தான் ரட்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார்.இப்படி ஒரு நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டில் ரஷிதா, கதிர், குயின்ஸி ஆகியோருடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது திருமணம் குறித்து பேசுகையில் ‘நம்மளோட அடுத்த தலைமுறை எவ்ளோ கஷ்டப்பாடுவாங்க, அவங்களுக்கு எல்லாம் திருமணம் என்ற ஒரு கான்சப்டே இருக்காது. நான் எதற்கு எடுத்தாலும் குடும்பம் குடும்பம் என்று பார்த்து தான் அனைத்தையும் இழந்தேன். என் மொத்த வாழ்க்கையும் விமர்சங்களை பார்த்தே போய்விட்டது. என் வாழ்க்கை முழுதும் குடும்பம் குடும்பம் என்று போய்விட்டது.

-விளம்பரம்-

நான் ஒரு பார்ட்டிக்கு கூட போனது இல்லை. நிறைய பேர் என்னிடம் கேட்பார்கள் பெங்களூரில் பிறந்துவிட்டு பார்ட்டிக்கு கூட போக மாட்ற என்று கேட்பார்கள். ஒரு ஷாப்பிங் செல்ல வேண்டும் என்றால் கூட நான் குடும்பத்துடன் மட்டும் தான் போவேன். குடும்பம் தான் என்னுடைய பலம் மற்றும் பலவீனம். அம்மா அப்பா எல்லோரும் தன்னுடைய குழந்தைக்கு குழந்தைக்கு என்று அனைத்தையும் கொடுத்து விடுகிறார்கள். திருமணத்திற்கு பின்னர் அவர்களுக்கு ஏதாவது வேண்டுமென்றால் அவரிடம் கேட்கலாமா வேண்டாமா என்று யோசித்து விட்டு விடுவார்கள்.

அம்மா அப்பாவை வேறு யார் பார்த்துக் கொள்வார்கள். நாம தானே பார்த்துக் கொள்ள வேண்டும். ஆனால், ஒரு சில கட்டுப்பாடுகளால் நமக்கும் அவர்களுக்கு எதுவும் கொடுக்க முடியாது. அது போன்ற சூழ்நிலைகள் எல்லாம் மிகவும் கஷ்டமாக இருக்கும். நான் சம்பாதிக்கிறேன் நான் ஏன் என்னுடைய தாய் தந்தைக்கு கொடுக்கக் கூடாது. நீ யார் அதை கேட்பதற்கு என்று கண்டிப்பாக ஒரு எண்ணம் தோன்றும். அதுபோன்ற நிலைமை எல்லாம் யாருக்கும் வரக்கூடாது. நான் அந்த நிலைமையை மிகவும் மோசமாக அனுபவித்து இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

Advertisement