பார்ட்டில எல்லார் முன்னாடி இவதான் என் பொண்டாட்டினு சொல்லிட்டார் ! ரக்‌ஷிதா

0
7957
saravanan meenatchi rakshita
- Advertisement -

‘பிரிவோம் சந்திப்போம்’ தொடரில் சந்தித்த ஜோடி ரச்சிதா-தினேஷ். பிறகு ஒருவரையொருவர் பிரிய முடியாமல் போக வாழ்க்கையில் சேர்ந்தார்கள். காதலித்த நாள்களை நினைவுகூரக் கேட்டால், ரச்சிதா முகத்தில் அவ்வளவு வெட்கம்! ‘ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா’ என தினேஷை ரச்சிதாவும் ‘கன்னடத்துப் பைங்கிளி’ (ஜூனியராம்) என ரச்சிதாவை தினேஷும் கொஞ்சிக் கொண்டிருந்த ஒரு பொழுதில் சந்தித்தோம்..

-விளம்பரம்-

rachitha

- Advertisement -

புரொபோஸல் நாள் ப்ளீஸ்…

‘நான் கொஞ்சம் அப்பால போயிடட்டுமா? பக்கத்துல இருந்தா, பள்ளிக்கூடத்துல ஒருத்தன் பல்லிளிச்சு வந்தான், காலேஜ்ல ஒருத்தன் காலடியிலயே கிடந்தான்’னு எடுத்து விடுவாங்க” என்றார் தினேஷ். ‘உண்மை யாருக்குதான் பிடிக்கும்? நாம தொடங்கலாம்’ என ஆரம்பித்தார் ரச்சிதா…

-விளம்பரம்-

”பத்தாவது படிக்கிறப்போ சைக்கிள்ல ஸ்கூலுக்குப் போயிட்டிருந்தேன். இன்னொரு சைக்கிள்மேட் எங்கூடவே வருவான். ‘பட்டுனு ஒருநாள் லவ் பண்றேன்னு சொன்னது அவனே. எனக்கு வெட்கமும் சிரிப்புமா வந்திச்சு. கூடவே பயமும். ஃப்ரெண்ட்ஸ் பயம் காட்ட, நாலே நாள்ல ரூட்டை மாத்திட்டேன். அடுத்த மாசமே முழுப் பரீட்சை வந்து அந்த வகுப்பே முடிய, அவ்ளோதான் மேட்டர். சீரியஸான புரொபோஸலுக்கு வர்றேன்..

‘பிரிவோம் சந்திப்போம்’ நேரத்துல பழகினோம். எனக்கு இவர் மேல காதல் இருக்கான்னு தெரியலை. ஆனா அவருக்கு இருந்திருக்கு. ‘நியூ இயர் பார்ட்டி’ எனக் கூட்டிட்டுப் போனார். அங்க சுத்தி அவரோட ஃப்ரெண்ட்ஸ் உட்காந்திருக்க, அவங்க கிட்ட நான் எதிர்பாராத சமயத்துல ‘நான் கட்டிக்கப் போற பொண்ணு’ அறிமுகப்படுத்திட்டார். உள்ளுக்குள்ள என்னவோ செய்ய பார்ட்டி முழுக்க மூட் அவுட்.

rachitha

எப்போ ஏத்துக்கிட்டீங்க?

”ரெண்டு மாசத்துல ‘அன்னையர் தினம்’ வந்திச்சு. ‘எங்கம்மா எனக்கு உயிர். அடுத்த இடத்துல இருப்பீங்கன்னு நினைக்கேன். அதனால.. அதனால.. ச்சீ. போடா..’ இதான் என்னோட ரிப்ளை வார்த்தைகள்.

பரிமாறிக்கொண்ட முதல் பரிசு…

”நான் அவருக்குத் தந்தது, நாய்க்குட்டி. அவர் எனக்குத் தந்தது, என்னோட ஓவியம். அழகா ட்ராயிங் பண்ணுவார். என்னை வரைஞ்சு பிறந்த நாள் அன்னிக்கு சரியா நடுராத்திரி பன்னிரண்டு மணிக்கு சென்னையில இருந்து பெங்களூருக்கு புல்லட்லேயே வந்து கதவைத் தட்டினார். எங்க வீட்டுக்காரங்க புல்லரிச்சுப் போனாங்க. காதலியைக் கரெக்ட் செய்யறதுக்கு முதல்ல அவங்க வீட்டைக் கரெக்ட் செய்யணும்கிறதுல கரெக்டா இருந்தார்.

rachitha

புரொபோஸலுக்குப் பிறகு சேர்ந்து சென்ற லாங் ட்ரிப்…

”புதுச்சேரி. ஒரு கல்யாணத்துக்குப் போனோம். அங்கேயே எங்க கல்யாணப் பத்திரிகையும் வெச்சாச்சு. வழியில கிழக்குக் கடற்கரைச் சாலையில் அங்கங்க காலாற கடல் நனைச்சுகிட்டே வந்தோம்”

கடைசிக் கேள்வி தினேஷிடம்.. ஏன் அப்படி புரொபோஸ் பண்ணீங்க?

”அதுக்கு முன்னாடி வெட்கப்பட்டே பார்த்ததில்லை. பார்க்க ஆசைப்பட்டேன், அதான்.. செமயா இருந்திச்சு அந்த வெட்கம்”!

Advertisement