சின்னத்திரை தொடர்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரக்ஷிதா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் அறிமுகம் ஆனார். இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி2, சரவணன் மீனாட்சி 3 போன்ற சீரியல்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். இறுதியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் மகா என்ற கதாபாத்திரத்தில் ரக்ஷிதா நடித்து வந்தார்.இந்த தொடர் 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது. நாம் இருவர் நமக்கு இருவர் தொடரின் முதல் பாகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் ஒளிபரப்பப்பட்டது. . இதில் மிர்ச்சி செந்தில் கதாநாயகனாக நடித்து வந்தனர்.
இந்த நிலையில் இந்த சீரியலில் இருந்து ரக்ஷிதா விலகுவதாகஅறிவித்து இருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்து பதிவு ஒன்றை போட்டிருந்த ரக்ஷிதா ‘என்னை விரும்பும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. அதுமட்டுமில்லாமல் இன்ஸ்டாகிராமில் என்னை பின் தொடர்பவர்களுக்கு நன்றி. உங்களை வரவேற்கிறேன். நாம் இருவர் நமக்கு இருவர் தொடரிலிருந்து இனி நான் இல்லை. நான் சீரியலில் இல்லை என்பது உங்களில் பலருக்கு ஏமாற்றமாக இருக்கும் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.
NINI இருந்து விலகிய ரஷிதா :
ஆனால், சில சூழ்நிலை காரணத்தினால் தான் என்னால் சீரியலில் நடிக்க முடியாமல் போனது. அதனால் தயவு செய்து இந்த முடிவை எல்லோரும் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏமாற்றம் தந்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள். எனக்கு வருத்தமாகத் தான் உள்ளது. ஆனால், பல நேரங்களில் மதிப்பற்றவளாக நான் உணர்ந்தேன்.இந்தத் தொடரில் எனக்கு மதிப்பில்லை என்பதை உணர்ந்து தான் இந்தத் தொடரில் இனி நடிக்க வேண்டாம் என்று நினைத்தேன்.
புதிய சீரியலில் கமிட் ஆன ரக்ஷிதா :
நான் இந்த தொடரில் இருக்கிறேனா? இல்லையா? என்று எந்த வித்தியாசமும் இல்லை என்பதை உணர்ந்ததால் தான் நான் இந்த முடிவை எடுத்தேன். அதனால் பெரிதாக யாரும் எதையும் எடுத்துக்கொள்ள வேண்டாம். மேலும், நாம் நமக்கு இருக்கும் மற்ற வேலைகளில் கவனம் செலுத்துவோம். வழக்கம் போல் நாம் இருவர் நமக்கு இருவர் தொடருக்கு உங்களுடைய ஆதரவை தாருங்கள் என்று பதிவிட்டு இருந்தார்.
சொல்ல மறந்த கதை :
இதை தொடர்ந்து தற்போது சொல்ல மறந்த கதை தொடரில் நடித்து வருகிறார்.அவருக்கு ஜோடியாக சத்யா சீரியல் புகழ் அமுல் பேபி விஷ்ணு நடித்து வந்தார். சாதனா என்ற ரோலில் ரச்சிதாவின் நடிப்பு பலரின் கவனத்தையும் பெற்றது.இதனால் பலரும் இந்த சீரியலை விரும்பி பார்க்க தொடங்கினர். நீதிக்காக அவர் நடத்திய போராட்டம் அவருக்கு உதவும் ரிப்போட்டராக அர்ஜூன் ரோலில் விஷ்ணுவின் நடிப்பு அப்லாஸ் அள்ளி இருந்தார்.
புலம்பும் ரசிகர்கள் :
இந்நிலையில் திடீரென்று இந்த சீரியல் முடிய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சீரியல் தொடங்கி 1 வருடம் கூட முழுமையாக முடியாத நிலையில் அதற்குள் சீரியலை முடிக்க என்ன காரணம்? என கேட்டு வருகின்றனர். மேலும், நன்றாக சென்றுகொண்டு இருக்கும் சீரியலை ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.