9 ஆண்டு திருமண வாழ்கையில் வந்த விரிசல் ? கணவரை பிரிந்தாரா ரஷிதா – அவரின் வீடியோவால் எழுந்த குழப்பம்.

0
918
rachitha
- Advertisement -

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரக்ஷிதா. ரக்ஷிதா கர்நாடகாவை சேர்ந்தவர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் தமிழக மக்கள் மத்தியில் அறிமுகம் ஆனார். இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி 2, சரவணன் மீனாட்சி 3, நாச்சியாபுரம் போன்ற சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். இந்த சீரியலில் கிடைத்த புகழால் ரசிதாவிற்கு சினிமாவில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பும் அமைந்தது. இதுவரை இவர் இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் 2015 ஆம் ஆண்டு ராதாமோகன் இயக்கத்தில் கருணாகரன் நடிப்பில் வெளியான ‘உப்பு கருவாடு’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 111-7.jpg

பின் சினிமாவில் வரவேற்பு குறைந்தவுடன் இவர் சின்னத்திரை நோக்கி வந்து விட்டார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் மகா என்ற கதாபாத்திரத்தில் ரக்ஷிதா நடித்து இருந்தார். ஆனால், இந்த தொடரில் இருந்து அவர் திடீரென்று விலகிவிட்டார். தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘சொல்ல மறந்த கதை’ தொடரில் நடித்து வருகிறார்.

- Advertisement -

இது சொல்ல மறந்த கதை :

திருமணமாகி கணவர் இல்லாமல் குழந்தைகளுடன் ஒரு பெண் வாழ முடியாதா? திருமணம் ஆகாமல் ஒரு பெண்ணால் தனித்து வாழ முடியாதா? தனியாக இருக்கும் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ளும் ஆண்கள் என்று பெண்களை தவறாக பார்க்கப்படும் கண்ணோட்டத்தில் இந்த சீரியலின் கதை அமைந்திருக்கிறது. பெண்கள் நடைமுறையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சமூகத்தின் பிற்போக்குத்தனமான கண்ணோட்டத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த கதை அமைந்துள்ளது.

This image has an empty alt attribute; its file name is 1-178-1024x468.jpg

ரஷிதாவின் லேட்டஸ்ட் பேட்டி :

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரக்ஷிதா ‘இந்த கதாபாத்திரமும் தனது வாழ்க்கையும் சிறிது ஒத்துப்போவதாக இந்த பேட்டியில் பேசிய ரச்சித்தா, தற்போது தனிமையில் இருப்பதாக கூறியுள்ளார். மேலும், இந்த கதாபாத்திரத்தில் இருக்கும் தைரியமும், அந்தந்த சூழ்நிலைகளை சமாளிக்கும் Maturity-யும் தனக்கு இருப்பதாகவும் கூறியுள்ளார். ரக்ஷிதா இப்படி பேசியதை வைத்த அவர் உண்மையில் கணவரை பிரிந்துவிட்டாரா என்று பலரும் கூறி வருகின்றனர்.   

-விளம்பரம்-

ரஷிதா – தினேஷ் பிரிந்துவிட்டனரா :

கடந்த சில மாதங்களாகவே இவர்களுக்குள் பிரச்சினை என்ற தகவல் சோசியல் மீடியாவில் வெளிவந்தது. அதுமட்டுமில்லாமல் ரக்ஷிதா- தினேஷ் இருவரும் பேசிக்கொண்டே ஒரு வருடத்துக்கு மேல் இருக்கும் என்ற தகவலும் அவர்களின் நெருக்கமான வட்டாரத்தில் பேசினார்கள். ஏற்கனவேய இது குறித்து இவர்களின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் விசாரித்த போது அவர்கள் கூறியது, பிரிவோம் சந்திப்போம் என்று சீரியலில் தான் இரண்டு பேரும் சந்தித்தார்கள்.

ஒரு வருடமாக பேசவில்லை :

சரவணன் மீனாட்சி சீரியலை தொடர்ந்து ரக்ஷிதா பல சீரியல்களில் நடித்து வந்தார். அப்படியே குடும்ப வாழ்க்கையும் நன்றாகத்தான் பார்த்து கொண்டு வந்தார். இப்படி இருக்கும் போது என்ன பிரச்சனை? என்ன ஆனது? என்று தெரியவில்லை. இருவரும் ஒரு வருஷமாக பேசுவதில்லை. எங்களுக்கு தெரிந்த வரை ரக்ஷிதா சீரியலில் பிசியாக இருக்கிறார்.அதுமட்டுமில்லாமல் ரக்ஷிதா எப்போதுமே தொழிலில் அதிக ஈடுபாடு கொண்டவர். அதேநேரம் குடும்பம் சீரியல் இரண்டையும் பேலன்ஸ் பண்ணவும் தெரிந்தவர். கணவன் மனைவி இரண்டு பேரும் ஒரே துறையில் இருக்கும் போது சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வருவது வழக்கம். அந்த மாதிரி இவர்கள் இடையில் வந்திருக்கலாம்.

Rachitha-and-her-husband

பேச்சு வார்த்தையும் தோல்வி :

நண்பர்கள் சிலர் அதில் ஆதாயம் பார்த்து இருக்கலாம். ஆனால், இவர்களுக்கு இடையில் பிரச்சனை பெரிதான நிலையில் இரு வீட்டுப் பெரியவர்கள் தலையிட்டு சமாதானம் செய்து வைக்க முயற்சி செய்து இருக்கிறார்கள். இருந்தும் அந்த முயற்சி கை கொடுக்கவில்லை. அதனாலேயே ஒரே வீட்டில் இருந்தால் பிரச்சனை அதிகரிக்கும் என்று சொல்லித்தான் இப்போதைக்கு கொஞ்சநாள் தனித்தனியாக இருக்கலாம் என்று முடிவு செய்து பிரிந்திருக்கிறார்கள். பெரியவர்கள் முயற்சி செய்து தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்று கூறினார்கள். இப்படி பிரிவோம் சந்திப்போம் சீரியலில் சேர்ந்த ஜோடி இப்படி பிரிந்து இருப்பது ரசிகர்கள் பலருக்கும் வருத்தத்தை தந்து இருக்கிறது.மேலும், சீக்கிரத்தில் இவர்கள் சேர வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் கேட்டு வருகிறார்கள்.

Advertisement