நடிகை ரக்ஷிதா இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகும் நபர் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரக்ஷிதா. ரக்ஷிதா கர்நாடகாவை சேர்ந்தவர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் தான் தமிழக மக்கள் மத்தியில் அறிமுகம் ஆகி இருந்தார். இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி 2, சரவணன் மீனாட்சி 3, நாச்சியாபுரம் போன்ற பல சீரியல்களில் நடித்து இருந்தார்.
பின் இவர் சின்னத்திரையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தார். இந்த சீரியலில் கிடைத்த புகழால் ரசிதாவிற்கு சினிமாவில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பும் அமைந்தது. இதுவரை இவர் இரண்டு திரைப்படங்களில் மட்டும் நடித்து இருக்கிறார். தமிழில் 2015 ஆம் ஆண்டு ராதாமோகன் இயக்கத்தில் கருணாகரன் நடிப்பில் வெளியான ‘உப்பு கருவாடு’ என்ற படத்திலும் நடித்து இருந்தார். பின் சினிமாவில் வரவேற்பு குறைந்தவுடன் இவர் சின்னத்திரை நோக்கி வந்து விட்டார்.
நாம் இருவர் நமக்கு இருவர் 2 :
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்து சமீபத்தில் முடிவடைந்த நாம் இருவர் நமக்கு இருவர் 2 என்ற தொடரில் மகா என்ற கதாபாத்திரத்தில் ரக்ஷிதா நடித்து இருந்தார். ஆனால், இந்த தொடரில் இருந்து அவர் திடீரென்று விலகிவிட்டார். தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘இது சொல்ல மறந்த கதை’ என்ற தொடரில் நடித்து வருகிறார். திருமணமாகி கணவர் இல்லாமல் குழந்தைகளுடன் ஒரு பெண் வாழ முடியாதா? தனியாக இருக்கும் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ளும் ஆண்கள், பெண்களை தவறாக பார்க்கப்படும் கண்ணோட்டத்தில் இந்த சீரியலின் கதை அமைந்திருக்கிறது.
இது சொல்ல மறந்த கதை:
பெண்கள் நடைமுறையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சமூகத்தின் பிற்போக்குத்தனமான கண்ணோட்டத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த கதை அமைந்துள்ளது. இந்த சீரியல் ஒளிபரப்பான குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் ரக்ஷிதா தன் கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்கிறார் என்று சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. சமீபத்தில் ரக்ஷிதா பேட்டி ஒன்று அளித்து இருந்தார்.
கணவரை பிரிந்த ரக்ஷிதா:
அதில், இந்த கதாபாத்திரமும் தனது வாழ்க்கையும் சிறிது ஒத்துப்போவதாகவும், தற்போது தனிமையில் இருப்பதாகவும், இந்த கதாபாத்திரத்தில் இருக்கும் தைரியமும், அந்தந்த சூழ்நிலைகளை சமாளிக்கும் Maturity-யும் தனக்கு இருப்பதாகவும் ரக்ஷிதா கூறி இருந்தார். ரக்ஷிதா இப்படி பேசியதை வைத்து அவர் உண்மையில் கணவரை விட்டு பிரிந்துவிட்டார் என்பது உறுதி ஆகி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ரக்ஷிதா- தினேஷ் இருவரும் பேசிக்கொண்டே ஒரு வருடத்துக்கு மேல் இருக்கும் என்ற தகவலும் அவர்களின் நெருக்கமான வட்டாரத்தில் இருந்தார்கள்.
ரக்ஷிதா இரண்டாவது திருமணம் :
இந்த நிலையில் நடிகை ரக்ஷிதா இரண்டாவது திருமணம் செய்து இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இவர்களுடைய திருமண வாழ்க்கை விவாகரத்து வரை சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த நேரத்தில் ரக்ஷிதா விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் அதுவும் அவர் ஒரு இயக்குனரை தான் திருமணம் செய்கிறார் என்ற தகவலும் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. ஆனால், அவரை பற்றி விவரம் எதுவும் வெளியாகவில்லை. இதுவும் காதல் திருமணம் என்றும் கூறுகின்றனர்.