சந்தா கட்டாத விஜய், ஸ்ருதிஹாசன் மீது ஏன் ஆக்ஷன் எடுக்கவில்லை? சின்மயி மட்டும் எளக்காரமா? ராதாரவி கொடுத்த விளக்கம்

0
690
- Advertisement -

டப்பிங் யூனியன் விவகாரம் தொடர்பாக சின்மயி கொடுத்த குற்றச்சாட்டிற்கு நடிகர் ராதாரவி கொடுத்திருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகியாக திகழ்பவர் சின்மயி . இவர் ஏ.ஆர். ரகுமான் இசையில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதனை தொடர்ந்து இவர் பாடிய பல்வேறு பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் பணியாற்றி இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் இவர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இதனால் சின்மயிக்கும் வைரமுத்துவுக்கும் இடையே இடையே பணிப்போரே நடந்து கொண்டு இருக்கிறது. இந்த விவகாரம் அடுத்து சின்மயியை டப்பிங் யூனியிலிருந்து நீக்கி இருக்கிறார்கள்.

- Advertisement -

சின்மயி குற்றச்சாட்டு:

இதனால் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இவரால் தமிழ் மொழி படங்களுக்கு டப்பிங் பேச முடியவில்லை. இதை செய்தது ராதாரவி தான் என்று சின்மயி குற்றம் சாட்டியிருந்தார். அதுமட்டுமில்லாமல் விஜய், ஸ்ருதிஹாசன் போன்ற நடிகர்களும் சந்தா கட்டவில்லை. இருந்தாலும், அவர்கள் டப்பிங் யூனியலில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்கள் மீது ஆக்சன் எடுக்காதது ஏன்? என்றெல்லாம் பல கேள்விகள் எழுந்திருக்கிறது.

சின்மயி அளித்த குற்றச்சாட்டு:

இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் ராதாரவி கூறியிருப்பது,
டப்பிங் யூனியனில் மஞ்சள் நிற அட்டை வைத்திருப்பவர்கள் வருடம் முழுவதும் தங்களுடைய சந்தாவை புதுப்பிக்க வேண்டும். சின்மயியும் அந்த கார்டை தான் வைத்திருந்தார். ஆனால், அவர் புதுவிக்கவில்லை. அதனால் தான் அவரை டப்பிங் யூனியிலிருந்து நீக்கி விட்டோம். அது மட்டும் இல்லாமல் மஞ்சள் நிற அட்டை வைத்திருந்த அவர் வெள்ளை நிற அட்டை இருப்பதாக பொய் சொல்லி இருந்தார்.

-விளம்பரம்-

விஜய், ஸ்ருதிஹாசன் குறித்து சொன்னது:

அதேபோல் விஜய், ஸ்ருதிஹாசன் ஆகியோர் டப்பிங் யூனியனில் சந்தா கட்டாமல் இருந்தார்கள். பின் ஹெரால்டு ராமசாமி என்பவர் மாதம் மாதம் 15 ஆயிரம் ரூபாய் கொடுத்து அவர்களுக்கு சந்தா கட்ட எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கிறார். அதிலிருந்து தான் நாங்கள் விஜய், ஸ்ருதிஹாசன் உடைய சந்தா காசு எடுத்துக் கொள்ளுவோம். மேலும், சின்மயி மீண்டும் டப்பிங் யூனியனுக்கு வந்தால் நிச்சயமாக அந்த காம்பவுண்டுகள் கூட சேர்க்க மாட்டோம். அவருக்கு இந்த டப்பிங் யூனியனில் வர தகுதியே இல்லை என்று கூறியிருக்கிறார்.

டப்பிங் யூனியன் தேர்தல்:

டப்பிங் யூனியனுக்கு நீண்ட காலமாக தலைவராக இருந்தவர் ராதாரவி. இதனால் இந்த மாதம் 17 ஆம் தேதி டப்பிங் யூனியனுக்கு தலைவர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் ராதாரவியுடன் டப்பிங் யூனியன் பொறுப்புகளில் இருப்பவரும், சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தவருமான ராஜேந்திரனும் போட்டியிடுகிறார். மேலும், தேர்தல் தொடர்பாக இருவரும் காரசாரமாக பேசி வருகிறார்கள். இந்த முறை ராதராவி வெற்றி பெற வாய்ப்பு குறைவு என்றும் கூறப்படுகிறது.

Advertisement