சுனாமி பாதிப்பில் பெற்றோர்களை இழந்து  பாலத்தின் அருகே அழுதுகொண்டு இருந்த குழந்தை தத்தெடுத்த ராதாகிருஷ்ணன்.

0
838
- Advertisement -

சுனாமியால் ஆதரவின்றி தவித்த பெண்ணை பாதுகாத்து அரவணைத்து தற்போது அவருக்கு ஐஏஎஸ் அதிகாரி திருமணம் செய்துள்ள சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்னர் 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை ஆழிப்பேரலை என்ற சுனாமி தாக்கியது. அதன் கோர தாண்டவத்தை இன்று நினைத்தாலும் நெஞ்சை நடுங்க வைக்கும். சில நிமிடங்களில் ஆழிப்பேரலை ஏராளமானோர் வாழ்க்கையை பறித்தது. அதற்கு முன் இந்த மாதிரியான இயற்கை சீற்றத்தை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். குறிப்பாக தமிழகத்தில் சென்னை, கடலூர், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் 7,000 பேருக்கு மேல் பலியாகியிருந்தனர்.

-விளம்பரம்-

இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மட்டும் 10 ஆயிரத்தை கடந்தது. பல்லாயிரக்கணக்கானோர் உடமைகளை இழந்து தவித்தனர். இதனால் பல்வேறு நிவாரண பணிகளை அரசும், சர்வதேச தொண்டு நிறுவனங்களும் மேற்கொண்டது. பாதிக்கப்பட்ட மக்கள் இன்றளவும் மன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தவித்து தான் வருகிறார்கள். குறிப்பாக நாகை மாவட்டம் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது. இந்த சுனாமியில் தாயும், தந்தையும் இழந்து ஏராளமான குழந்தைகள் தவித்தார்கள்.

- Advertisement -

சுனாமியில் தொடங்கப்பட்ட அன்னை சத்யா இல்லம்:

அப்போது நாகையில் அரசால் தொடங்கப்பட்ட அன்னை சத்யா இல்லத்தில் 99 தாய் மற்றும் தந்தை இழந்த குழந்தைகள் தத்து எடுத்து வளர்க்கப்பட்டனர். மேலும், சுனாமி பேரலை பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்றார் ராதாகிருஷ்ணன். அப்போது பாலத்தின் அருகே அழுது கொண்டிருந்த குழந்தைகள் தான் சவுமியா, மீனா. அப்போது தான் அவர்களை முதலில் சந்தித்தார். அதில் ஒன்பது மாத குழந்தையான சவுமியா, 3 மாத குழந்தையான மீனா ஆகிய பச்சிளங்குழந்தைகளை அப்போதைய நாகை மாவட்ட ஆட்சியராக இருந்தவர் தற்போது தமிழக சுகாதாரத் துறை செயலராக செயல்படும் ராதாகிருஷ்ணன் தத்து எடுத்து வளர்த்தார்.

குழந்தையை மீட்டு எடுத்து வளர்த்த ராதாகிருஷ்ணன்:

பின் குழந்தைகளை மீட்டு மனித நேயத்துடன் வளர்த்து இன்றுவரை திகழ்கிறார். மேலும், சென்னைக்கு பணி மாறுதலில் ராதாகிருஷ்ணன் சென்றாலும் மாதம் மாதம் நாகை வந்து குழந்தைகளோடு நேரங்களை செலவிட்டு அவர்களுடைய கல்வியில் மட்டுமின்றி அவர்களின் வளர்ச்சிக்கும் அதிக பங்களிப்பு செய்து குழந்தைகளை பராமரித்து வந்தார். பின் சௌமியா மற்றும் மீனா ஆகிய இருவரும் 18 வயதை கடந்த பின் நாகை கடற்கரை சாலையில் வசிக்கும் மலர்விழி மற்றும் மணிவண்ணன் ஆகியோர் அவர்களை தத்து எடுத்து வளர்த்து வந்தனர்.

-விளம்பரம்-

ராதாகிருஷ்ணன் வளர்த்த மகளின் திருமணம்:

இந்த நிலையில் சௌமியாவுக்கு இன்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. இவர்களுடைய திருமணம் ஆபீசஸ் கிளப்பில் நடந்தது. இந்த விழாவில் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ், நாகை எஸ்பி ஜவஹர், நாகையை சேர்ந்த தன்னார்வ அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பித்து இருக்கிறார்கள். மேலும், பாதுகாவலராக குழந்தையை வளர்த்தாலும் தங்களுடைய பெற்ற மகளைப் போலவே திருமணம் செய்து வைத்திருப்பதற்கு சௌமியாவின் வளர்ப்பு பெற்றோரை பாராட்டி இருந்தார்கள்.

ராதாகிருஷ்ணனை பாராட்டும் நெட்டிசன்கள்:

மேலும், இது குறித்து சௌமியா கூறி இருப்பது, எனக்கு திருமணம் நடந்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. சுனாமியால் ஆதரவின்றி அனாதையாக கிடந்த எங்களை வளர்த்து பெரிய ஆளாக மாற்றி தந்தையாகவும், பாதுகாவலராகவும் இருந்தவர் ராதாகிருஷ்ணன் அப்பா தான் என்று பேச முடியாமல் ஆனந்தக்கண்ணீர் விட்டிருக்கிறார் சௌமியா. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி, வேலை என்று முடிந்த உதவிகளை செய்தது மட்டும் இல்லாமல் அவர்களின் வாழ்க்கையின் அடுத்த நிலையான திருமணம் செய்த அழகு பார்த்து இருக்கிறார் ராதாகிருஷ்ணன். தற்போது ராதாகிருஷ்ணனின் மனிதநேயத்தை பார்த்து பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Advertisement