வெந்து தணிந்தது காடு படத்தின் 50வது நாள் வெற்றி விழா கொண்டாட்டத்தில் ராதிகா பேசி இருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்த சிம்பு இடையில் நடித்த பல்வேறு திரைப்படங்கள் பெரும் தோல்வியை சந்தித்தது. அதேபோல இவர் உடல் எடை கூடியதால் இவர் நடிக்கும் பழங்கள் எல்லாம் பெரும் கேள்விக்கு உள்ளானது. இப்படி ஒரு நிலையில் தன்னுடைய உடல் எடையை குறைத்து ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்தார்.

ஆனால், அந்தத் திரைப்படமும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இதை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்திருந்தார்.இ ந்த திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்து சிம்புவிற்கு ஒரு ரீ என்ட்ரியாக அமைந்திருந்தது இந்த படத்தின் வெற்றிக் களிப்பில் இருந்த சிம்புவிற்கு அடுத்த ஒரு உற்சாகமாக வெந்து தணிந்தது காடு திரைப்படம் அமைந்திருந்தது. இந்த படத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிஇருந்தார்.
பெரும் வரவேற்பை பெற்ற படம் :
இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான்இசையமைத்து இருந்தார். இந்த படத்தில் சிம்புவுடன், ராதிகா, சித்தி இத்னானி உட்பட பல நடிகர்கள் நடித்துஇருந்தனர். இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்து இருந்தது. பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த வெந்து தணிந்தது காடு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் சிம்பு அவர்கள் முத்து எனும் கதாபாத்திரத்தில்நடித்து இருந்தார்.
https://www.youtube.com/watch?v=Heb5cW0ARfs
படத்தின் இரண்டாம் பாகம் :
எந்த ஒரு ஆர்ப்பாட்டம் இல்லாத தன்னுடைய நடிப்பை சிம்பு வெளிப்படுத்தி இருக்கிறார். முதல் பாதியில் வெகுளித்தனமாகவும், இரண்டாம் பாதியில் மாசான நடிப்பையும் சிம்பு கொடுத்திருக்கிறார். காதல் காட்சிகளில் வழக்கம் போல் சிம்பு பார்வையாளர்களை ரசிக்க வைத்திருந்தார் என்றே சொல்லலாம். மேலும், இந்த படத்தின் Climaxல் இரண்டாம் பாகம் வருவது போல லீட் காண்பிக்கபட்டு இருந்தது.
50வது நாள் கொண்டாட்டம் :
இப்படி ஒரு நிலையால் இந்த படத்தின் 50வது நாள் வெற்றி கொண்டாட்டம் விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் , சரத்குமார் உள்ளிட்ட துறை பிரபலங்கள் பங்கேற்றனர்.இந்த விழாவில் பேசிய ராதிகா 'எனக்கும் சிம்புவின் அம்மா அப்பாவிற்கு நீண்ட வருட பழக்கம் நாங்கள் மிகவும் நெருக்கமானவர்கள். ஒருமுறை அவர்கள் இருவரும் என்னிடம் வந்து 'ராதிகா சிம்புவ கொஞ்சம் திட்டுபா,சொல்ற பேச்சே கேட்கமாற்றான்' என்று சொன்னார்கள்.
View this post on Instagram
அதற்கு நான் சிம்புவிடம் உன்னோட பலம் உனக்கு தெரியல சிம்பு, உன் பலம் என்னனு தெரிஞ்சிக்க, நீ மீண்டும் வந்து I Am The Bestனு சொல்லணும்னு சொன்ன, இப்போ சிம்புவை நினைத்து பெருமையா இருக்கு' என்று பேசியுள்ளார். இதை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படத்தின் ஷூட்டிங் அனுபவத்தை சொன்ன ராதிகா 'இந்த படத்தின் முதல் நாளில் ஒரு கிராமத்துக்கு அழைத்துச் சென்று செருப்பு கூட இல்லாமல் நடந்து வர சொல்லிவிட்டு இவர் டென்டிற்குள் உட்கார்ந்து கொண்டிருந்தார். அப்போது நான் சிம்புவிடம் சொன்னேன் சிம்பு இந்த கௌதம் நம்மளை வச்சு செய்கிறான், இப்படி காய விட்டுட்டானே என்று பேசியதாகவும் அதை அங்கிருந்து கேட்ட கௌதம் நான் உங்களை கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன் ராதிகா என்று சொன்னதாகவும் கூறியுள்ளார்'





