ராதிகா ஆப்தேவின் கர்ப்பகால போட்டோ ஷூட்டுகளை நெட்டிசன்கள் விமர்சித்து வரும் பதிவு தான் தற்போது இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராதிகா ஆப்தே. இவர் Vaah! Life Ho Toh Aisi! என்ற ஹிந்தி படத்தின் மூலம் சினிமா திரை உலகிற்கு அறிமுகமானார். அதன் பின் இவர் தமிழ் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியான தோனி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார்.

அதனை தொடர்ந்து இவர் 2013 ஆம் ஆண்டு கார்த்தி, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாகியிருந்த ஆல் இன் ஆல் அழகு ராஜா என்ற படத்தில் நடித்தார். பின் பா. ரஞ்சித் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருந்த கபாலி படத்தில் ராதிகா ஆப்தே நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இதை அடுத்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார்.
ராதிகா ஆப்தே திரைப்பயணம்:
கடைசியாக இவர் தமிழில் சித்திரம் பேசுதடி 2 என்ற படத்தில் நடித்திருந்தார். அதற்கு பின் இவருடைய நடிப்பில் எந்த ஒரு படமும் தமிழில் வெளியாகவில்லை. ஆனாலும், தற்போது இவர் பாலிவுட், ஹாலிவுட் போன்ற பிறமொழி படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் ஹிந்தி, பெங்காலி, மராத்தி, மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

ராதிகா ஆப்தே குறித்த தகவல்:
அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக இவர் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கேரக்டர் எதுவாக இருந்தாலும் துணிந்து நடித்து வருகிறார். இதற்கு இடையே நடிகை ராதிகா ஆப்தே அவர்கள் கடந்த 2011 ஆம் ஆண்டு பெனெடிக்ட் டெயிலர் என்பவரை காதலித்து வந்தார். இருவருமே ஒர் ஆண்டு லிவிங் டுகெதரில் வாழ்ந்து இருந்தார்கள். பின் இவர்கள் கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பின்னும் ராதிகா படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார்.

ராதிகா ஆப்தே குழந்தை:
இதனால் இவர்கள் குழந்தை கொள்ளாமல் இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடிகை ராதிகா ஆப்தேவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்து இருக்கிறது. இதை அவர், தன் குழந்தைக்கு பால் ஊட்டும் படி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு கூறி இருந்தார். திருமணமாகி 12 ஆண்டுகள் கழித்து தான் இவர் குழந்தைக்கு தாயாகி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் குழந்தை பெறுவதற்கு முன்பு கர்பக்கால போட்டோ சூட் நடத்தி அதை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். குறிப்பாக, இவர் வலை போன்ற உடையை அணிந்து கொண்டு பேபி பம்ப் தெரியுமாரு புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.
View this post on Instagram
நெட்டிசன்கள் விமர்சனம்:
அதில் அவர், குழந்தை பிறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு இந்த போட்டோ சூட் செய்தேன். நான் இவ்வளவு எடைபோட்டு என்னை நான் பார்த்ததே இல்லை. இது கர்ப்பமாக இருக்கும்போது அதிகரித்த எடை கிடையாது. சில உடல் உபாதைகளால் ஏற்பட்டதும் கூட. என்னுடைய கை, கால்கள் வீங்கி இருந்தது. இடுப்பில் எனக்கு வலி ஏற்பட்டது. ஆனால், இந்த புகைப்படங்களில் நான் என்னுடைய அழகை மட்டும் பார்க்கிறேன். இந்த புகைப்படங்களை நான் எப்போதுமே போற்றுவேன் என்று கூறியிருந்தார். இதை பார்த்து பலரும், கலாச்சாரம் அழிந்துவிட்டது. போட்டோ சூட் என்ற பெயரில் மேற்கத்திய கலாச்சாரங்களை பின்பற்றுவதா? கர்ப்பகாலத்தின் போது இப்படி எல்லாம் நின்று போட்டோ எடுப்பதா? என்று மோசமாக ராதிகா ஆப்தேவை விமர்சித்து வருகிறார்கள்.






