விமான நிலையத்தில் ரஜினி பட நடிகைக்கு ஏற்பட்டிருக்கும் சோகமான நிலை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். Vaah! Life Ho Toh Aisi! என்ற ஹிந்தி படத்தின் மூலம் தான் திரை உலகிற்கு அறிமுகமானார் ராதிகா ஆப்தே. அதன் பின் இவர் தமிழ் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு பிரகாஷ்ராஜ் நடிப்பில் வெளியான தோனி என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து இவர் 2013 ஆம் ஆண்டு கார்த்தி, காஜல் அகர்வால், சந்தானம், பிரபு, சரண்யா ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருந்த ஆல் இன் ஆல் அழகு ராஜா என்ற படத்தில் நடித்தார். பின் பா. ரஞ்சித் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருந்த கபாலி படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவர் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படி இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். கடைசியாக இவர் தமிழில் சித்திரம் பேசுதடி 2 என்ற படத்தில் நடித்திருந்தார்.
ராதிகா ஆப்தே திரைப்பயணம்:
அதற்கு பிறகு இவருடைய நடிப்பில் எந்த ஒரு படமும் தமிழில் வெளியாகவில்லை. ஆனாலும், தற்போது இவர் பாலிவுட், ஹாலிவுட் போன்ற பிறமொழி படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் ஹிந்தி, பெங்காலி, மராத்தி, மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக இவர் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் கேரக்டர் எதுவாக இருந்தாலும் துணிந்து நடித்து வருகிறார்.
View this post on Instagram
நடிகை ராதிகா ஆப்தே பதிவு:
அதே போல் இவரின் அந்தரங்க புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது. இந்நிலையில் பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே விமான நிலையத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், விமான நிலையம் ஒன்றில் நானும் வேறு சில பயணிகளும் இன்று காலையில் எட்டு முப்பது மணிக்கு விமானத்தில் ஏறுவது. இப்போது மணி 10. 50 ஆகிவிட்டது. இன்னும் விமானம் ஏறவில்லை. விமானம் தாமதமானதால் எங்களை கண்ணாடி கதவு கொண்ட ஒரு அறையில் அடைத்து வைத்து விட்டார்கள்.
விமான நிலையத்தில் நடந்தது:
பெண்கள் மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். உள்ளே பாத்ரூம் வசதியோ அல்லது குடிநீர் வசதியோ எதுவும் கிடையாது. பாதுகாப்புக்கு நின்றவர்கள் கதவை திறக்கவில்லை. ஊழியர்களுக்கும் எந்த ஒரு தகவலையும் தெரிவிக்கவில்லை. ஒரு மணி நேரம் ஆவது உள்ளே இருக்க வேண்டி இருக்கும் என்று ஏர்லைன்ஸ் தரப்பில் சொல்லப்பட்டது. இப்போது 12 மணி வரை ஆகும் என்று சொல்கிறார்கள். நாங்கள் பூட்டிய அறைக்குள் இருக்கிறோம். விமான பயணியாளர்கள் மாறுவதாகவும், புதிய ஊழியர்கள் இன்னும் வரவில்லை என்று ஏர்லைன்ஸ் தரப்பில் சொன்னார்கள்.

பிரபலங்கள் பதில்:
எவ்வளவு நேரம் எங்களை இப்படி அடைத்து வைத்திருப்பார்கள் என்று தெரியவில்லை.பின் நான் எப்படியோ தப்பித்து வெளியில் வந்து பணியில் இருந்த பெண் ஊழியரிடம் பேசினேன் என்று கூறி விமான நிலையத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் ராதிகா ஆப்தே பகிர்ந்து இருக்கிறார். ஆனால், எந்த விமான நிலையம்? எந்த ஊர்? எந்த ஏர்லைன்ஸ்? என்று குறிப்பிடவில்லை. ஆனால், பெரும்பாலும் மும்பை விமான நிலையத்தில் தான் இது போன்ற சம்பவம் நடப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து கமலஹாசன் மற்றும் அவருடைய மகள் அக்சரா ஹாசன் இருவருமே மும்பை விமான நிலையத்தில் இதுபோன்று நடப்பது புதிது இல்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். பலருமே ராதிகாவிற்கு குரல் கொடுத்தும் பதிலையும் தெரிவித்து வருகிறார்கள்.






