இத்தனை வருடங்கள் திருமணமானதை மறைத்த கபாலி நடிகை.! இவர் தான் கணவராம்.!

0
546
rathika-apte

பாலிவுட் நடிகைகளில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் நடிகைகள் வெகு சிலரே. அவர்களில் ராதிகா ஆப்தேவும் ஒருவர். தமிழில் ‘தோனி’ திரைபடத்தில் அறிமுகம் ஆனார். சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ‘கபாலி’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருந்தார்.

அதற்கு முன்பாகவே கார்த்திக் நடிப்பில் வெளியான ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்திலும் நடித்துள்ளார் ராதிகா அப்டே. தமிழில் பரிட்சயமான நடிகை இல்லை என்றாலும் இந்தியில் சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருகிறார். இவரது அந்தரங்க புகைப்படங்கள் அடிக்கடி வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் இவருக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ளது என்ற செய்தி தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதனை ராதிகா ஆப்டேவே பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், நானும், பெனடிக்கும் 8 வருடங்களுக்கு முன்பு காதலித்து பதிவு திருமணம் செய்துகொண்டோம். இப்போது கூட பலருக்கு நாங்கள் திருமணம் செய்துகொண்டது தெரியாது.

நானும், எனது கணவரும் ஒருவர் மீது ஒருவர் அதிக பாசம் வைத்துள்ளோம். எங்களுக்குள் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தகராறுகள் வருவதுண்டு. ஆனாலும் அவை சிறிது நேரம்தான் இருக்கும். இருவரும் சண்டை போட்டால் சிறிது நேரத்திலேயே பேசிவிடுவோம். இதுவரை நானும் சரி அவரும் சரி ஒருவரை ஒருவர் விட்டுகொடுத்து தான் வாழ்ந்து வருகிறோம்.

-விளம்பரம்-

எனக்கு திருமணம் ஆனதை மறைக்க வேண்டும் என்று எண்ணம் இல்லை. அதை வெளியில் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை அவ்வளவு தான். தற்போது என் கணவர் லண்டலில் இருக்கிறார், நான் இங்கு மும்பையில். நாங்கள் இருவரும் மாதம் ஒரு முறை லண்டனிலோ மும்பையிலோ கண்டிப்பாக சந்தித்து விடுவோம் என்று கூறியுள்ளார் ராதிகா ஆப்தே.

Advertisement