திடீரென்று சீரியலில் இருந்து விலகிய ராதிகா.! அவருக்கு பதில் இந்த சூப்பர் நடிகை என்ட்ரி.!

0
498
Radhika

தமிழ் சினிமாவில் 90’ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ராதிகா. சினிமா பின்னணி கொண்ட பிரபலமாக இருந்தாலும் இவரது தனிப்பட்ட சிறப்பான நடிப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார் ராதிகா.

ராதிகா திரையுலகுக்கு வந்து நாற்பதாண்டுகள் ஆகிவிட்டன.  வெற்றிகரமாக கிழக்கே போன ரயில், இந்த நாற்பதாண்டுகளில் அரசியல், சினிமா, சின்னத்திரை என்று சகல திசைகளிலும் பயணம் செய்து சாதித்திருக்கிறது. வாணி-ராணி தொடரில் இரட்டை வேடங்களில் கலக்கிக்கொண்டிருந்த இந்த நடிகவேளின் வாரிசு, சமீபத்தில் `சந்திரகுமாரி’ சீரியலில் வரலாற்று நாயகியாகப் புது அவதாரம்எடுத்தார்.

தற்போதும் திரைப்படங்களில் நடித்து வரும் ராதிகா பல ஆண்டுகளாக ராடன் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் பல சீரியல்களை தயாரித்து வருகிறார். இதுவரை சித்தி, அண்ணாமலை, செல்லமே செல்வி, வாணி ராணி, சின்ன பாப்பா பெரிய பாப்பா, சிவமயம், ருத்ரவீணை போன்ற பல சீரியல்களை தயாரித்துள்ளார்.

Image result for Viji Chandrasekhar

இந்த நிலையில் திடீரென ராதிகா நடித்து வந்த சந்திரகுமாரி சீரியலில்இருந்து விலகியுள்ளார், தற்போது அவர் நடித்துவந்த கேரக்டரில் பிரபல நடிகை விஜி அவர்கள் நடிக்க இருக்கிறாராம். சரத் குமார் தற்போது தேர்தலில் போட்டியிட உள்ளதால் ராதிகா இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.