இலங்கை குண்டு வெடிப்பில் தப்பிய பிரபல தமிழ் நடிகை.! பதறி போய் போட்ட ட்வீட்.!

0
329
Srilanka

இலங்கையில் நடந்துள்ள குண்டு வெடிப்பு சம்பவம் தான் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈஸ்டர் தினமான இன்று(ஏப்ரல் 21) இலங்கை தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையில் கிறிஸ்வதவர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நடந்தது.

நான்கு தேவாலயங்களில் ஒரே நேரத்தில் குண்டுவெடிப்பு நடந்தது. கொச்சிக்கடை தேவாலயம், கட்டுவப்பிட்டிய தேவாலயம், கிங்ஸ்பெரி தேவாலயம், பட்டிகலோயா வில் உள்ள தேவாலயம் ஆகிய இடங்களில் குண்டுவெடித்தது.

இதில், பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த கோர சம்பவத்தில் இதுவரை 156 பேர் பலியாகியுள்ளனர் என்று கூறப்படுகிறது. மேலும், 300 கும் மேற்பட்டோர் படு காயம் அடைந்துள்ளனர்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இருந்து உயிர் தப்பியுள்ளார் பிரபல நடிகை ராதிகா. குண்டு வெடிப்பதற்கு சிறிது நேரத்தில் முன்பு தான் அங்கே இருந்து வெளியே வந்தாராம். அந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.