என் அம்மா தே**வா – பீச்சில் வால்கிங் சென்ற பயில்வானை வெளுத்து வாங்கியுள்ள ராதிகா. சமாதானம் செய்துள்ள பொது மக்கள்.

0
920
radhika
- Advertisement -

தனது தாயை பற்றி அவதூறாக பேசிய நடிகர் பயில்வான் ரங்கநாதனை பொது இடத்தில் வைத்து நடிகை ராதிகா வெளுத்து வாங்கிய உள்ள சம்பவம் சோசியல் மீடியாவில் வைரலானது. இதைத்தொடர்ந்து பயில்வான் மீண்டும் ராதிகா குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். தற்போது இது சோஷியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் உடன் இணைந்து படத்தில் நடித்து இருக்கிறார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தவுடன் தனியாக யூட்யூப் சேனல் உருவாக்கி அதில் சினிமா பிரபலங்கள் பலரை பற்றி அவதூறாக பேசி வருகிறார்.

-விளம்பரம்-

அதோடு இவர் நீண்ட காலமாகவே பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார். அதனால் சினிமா துறையில் நடக்கும் பல அந்தரங்க விஷயங்களை வெளி உலகிற்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறார். இவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து தமிழ் சினிமாவில் இருந்து வருவதால் சினிமா நட்சத்திரங்களைப் பற்றி அறியாத பல ரகசியங்களை தன்னுடைய பத்திரிக்கையின் மூலம் வெளியிட்டு வருகிறார். அதனால் இவருக்கும் சினிமா துறையை பிரபலங்களுக்கும் இடையயே வாக்குவாதம் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வரும் எதிர்ப்புகளுக்கும் பதிலடி கொடுத்து தன்னுடைய வேலையை தொடர்ந்து செய்து வருகிறார் பயில்வான்.

- Advertisement -

ராதிகா பற்றி பேசிய பயில்வான்:

மேலும், இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் இவர் சினிமா கிசுகிசு பற்றி பேச ஆரம்பித்த பின் தான் இவர் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். இவர் சினிமா துறையில் உள்ள நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் அவர்களைப் பற்றி அவதூறாக பேசி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவர் நடிகை ராதிகாவையும் அவருடைய தாயாரையும் பற்றி அவதூறாக பேசி இருந்த வீடியோவை யூட்யூப் இணையதளத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

கோபத்தால் ராதிகா செய்த வேலை:

இதனை அடுத்து ஆத்திரமடைந்த ராதிகா சமீபத்தில் திருவான்மியூர் கடற்கரையில் பயில்வானை வெளுத்து வாங்கி இருக்கிறார். அது என்னவென்றால், சமீபத்தில் திருவான்மியூர் கடற்கரையில் பயில்வான் நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். ராதிகா அவரை வழிமறித்து தன் தாயை பற்றி எப்படி அவதூறாக பேசி இருக்கிறாய்? என தகாத வார்த்தைகளால் சண்டை போட்டிருக்கிறார். பின் பயில்வான் ரங்கநாதன், ராதிகாவிடம் நேருக்கு நேர் நின்று மோதி இருக்கிறார். அப்படியே இவர்கள் சண்டை முற்றியது. இதனையடுத்து அந்த பகுதியில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்கள்.

-விளம்பரம்-

ராதிகா மீது கண்டனம் கூறும் பத்திரிகையாளர்:

மேலும், இருவருக்குமிடையே கடுமையான வார்த்தைகளுடன் கூடிய சண்டைகள் இருந்தாலும் இருவரும் காவல்துறையில் புகார் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து பயில்வான் ரங்கநாதன் உடன் சண்டையிட்ட ராதிகாவை கண்டித்து சினிமா பத்திரிகையாளர் ஒருவர் கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் அவர், பயில்வானை பஞ்சர் ஆக்கியது ஏன்? என்று கேட்டு இருந்தவருக்கு நடிகை ராதிகா விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், சுய விளம்பரத்துக்காக பயில்வான் இது போன்ற அவதூறுகளை பரப்பி வருகிறார். என்னுடைய தாயை மட்டுமில்லாமல் திரையுலகை சார்ந்த பலரையும் அவதூறாக பேசி வருகிறார்.

விளக்கம் கொடுத்த ராதிகா:

இதனால் நான் அவரை மறித்து கேள்வி கேட்டேன். நாகரீகம் கருதி அவரை அடிக்காமல் அங்கிருந்து வந்து விட்டேன் என்று தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் குறித்து சினிமா பிரபலங்கள் பலரும் நடிகை ராதிகாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருவது மட்டும் இல்லாமல் பூனைக்கு மணி கட்டி இருக்கிறார் என்று பாராட்டி வருகிறார்கள். மேலும், இந்த சம்பவத்தின் மூலம் பயில்வான் சினிமா பிரபலங்களை அவதூராக பேசமாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பயில்வான் உடைய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர் கூறியிருப்பது,

மீண்டும் ராதிகா குறித்து பயில்வான் வெளியிட்ட வீடியோ:

திருவான்மியூர் கடற்கரையில் என்னை தவறான வார்த்தையில் ராதிகா பேசினார். அது எப்படிப்பட்ட வார்த்தைகள் என்று என்னால் சொல்ல முடியாது. ஏனென்றால், அது எனக்கு தான் அசிங்கம். அவர்களுக்கு அசிங்கம் இல்லை. ஏனென்றால் அவர் எப்படிப்பட்டவர் என்று உங்களுக்கு தெரியும். நானே அவர்களைப் பற்றி நிறைய தடவை சொல்லி இருக்கேன். ஆனால், நான் ராதிகாவை பற்றி பொய்யாக எதுவும் பேசவில்லை. நான் சந்தித்தவை பத்திரிகைகளில் வந்த செய்திகளை வைத்து தான் பேசி இருக்கிறேன். இதில் வெறும் 60 சதவீதம் தான் அவரைப் பற்றி சொல்லியிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement