அதெல்லாம் குப்ப, நீங்க தான் அரசியல் வாதி நான் இல்ல – அனிமல் பட விஷயத்தில் சரத்குமார் கருத்துக்கு ராதிகா கொடுத்த பதிலடி.

0
538
- Advertisement -

சரத்குமார் உடைய கருத்துக்கு பேட்டியில் ராதிகா குப்பை என்று கூறி இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு சோசியல் மீடியாவில் ராதிகா அவர்கள் ஒரு படத்தை பற்றி விமர்சித்து பதிவு போட்டு இருந்தார். அதில் அவர் கடுமையாக அந்த படத்தை விமர்சித்து இருந்தார். ஆனால், அது எந்த படம் என்று குறிப்பிடவில்லை. பலரும் ராதிகா விமர்சித்தது அனிமல் படத்தை தான் என்று கூறுகின்றார்கள். அதோடு ராதிகா இதற்கு முன் இந்த அளவுக்கு எந்த ஒரு படத்தையும் கோபப்பட்டு மோசமாக திட்டியதில்லை.

-விளம்பரம்-

நாகரீகம் கருதி தான் அவர் அந்த படத்தினுடைய பெயரையும் சொல்லவில்லை. மேலும், நெட்டிசன்கள் சிலர் வேறு சில படங்களின் பெயர்களையும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இப்படி கடந்த சில தினங்களாக ராதிகாவின் பதிவு தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் சரத்குமார், ராதிகா இருவரும் கலந்து கொண்டு இருந்தார்கள். அப்போது ராதிகாவிடம் அந்த படம் குறித்து கேட்டு இருக்கிறார்கள். அதற்கு அவர், அத பத்தி பேசாதீங்க. இரண்டு நாள் புலம்பி விட்டேன் என்று கூருக்கிறார்.

- Advertisement -

ராதிகா-சரத்குமார் பேட்டி:

பின் சரத்குமாரிடம் கேட்டபோது, இது ராதிகா உடைய கருத்து. அதோடு சிலர் அந்த படத்தை வேற மாதிரி நினைக்கிறார்கள். அதை வித்தியாசமாக பார்க்கிறார்கள். அது எனக்கு புரியவில்லை என்று கூறினார். உடனே ராதிகா, perversion மற்றும் குப்பை என்று கூறியிருக்கிறார். தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ராதிகா சரத்குமார். இவர் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

ராதிகா திரைப்பயணம்:

அதன் பின் இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சரத்குமார்,அஜித்,விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் சினிமாவை தாண்டி சின்னத்திரையிலும் கலக்கி வருகிறார். அதோடு ராதிகா ராடான் டிவி என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் நூற்றுக்கணக்கான சீரியல்களை தயாரித்து இருக்கிறார். மேலும், இவர் சன் தொலைக்காட்சியில் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணாமலை, வாணி ராணி, செல்வி, அரசி, சித்தி என பல்வேறு தொடர்களில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

ராதிகா குறித்த தகவல்:

அதோடு இவர் இயக்கிய சீரியல்கள் எல்லாம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம். வெள்ளித்திரையில் சாதித்தவர்களால் சின்னத்திரையிலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்தவர் நடிகை ராதிகா சரத்குமார். தற்போது ராதிகா தயாரிப்பு மூலம் விஜய் டிவியில் “கிழக்கு வாசல்” என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2ல் ராதிகா நடித்து இருந்தார்.

ராதிகா குடும்பம்:

இதனை அடுத்தும் இவர் சில படங்களில் கமிட்டாகி இருக்கிறார். இப்படி இவர் ராதிகா சினிமா, தயாரிப்பு என்று சினிமா துறையில் நுழைந்து கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கிறார். இன்னும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து தான் வருகிறது. இதனிடையே ராதிகா கடந்த 2001-ம் ஆண்டு நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ராதிகா-சரத்குமார் இருவரும் இணைந்து படங்களில் நடித்தும் வருகிறார்கள்.

Advertisement