அரசியல்வாதியும், நடிகருமான சரத்குமாரை குறித்து மோசமாக பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை நடிகை ராதிகா வெளுத்து வாங்கி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீப காலமாகவே திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மோசமான வார்த்தைகளை பேசி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அந்த வகையில் இவர் சில மாதங்களுக்கு முன்பு நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் ஆன குஷ்புவை மோசமாக தவறாக பேசியிருந்தார்.
https://twitter.com/realradikaa/status/1790057857741951299
அவர் மட்டும் இல்லாமல் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவியை கூட விமர்சித்து பேசி இருந்தார். இவர் பேசிய வீடியோவை கண்டித்து பலருமே கண்டனம் தெரிவித்திருந்தார்கள். இதை அடுத்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்துமே சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை தற்காலிகமாக நீக்கப்பட்டது மட்டுமில்லாமல் நிரந்தரமாகவே நீக்கி இருந்தார்கள். மேலும், குஷ்புவை குறித்து மோசமாக பேசிய வழக்கில் கிருஷ்ணமூர்த்தியை போலீஸ் கைது செய்திருந்தது.
அதற்கு பிறகு அவர் ஜாமீனில் இருந்தும் வெளியே வந்தார். ஜாமினில் வெளியே வந்த பிறகு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தன்னுடைய செயலை நினைத்து வருத்தப்படுவதாக மன்னிப்பு கேட்டிருந்தார். அது மட்டும் இல்லாமல் தன்னுடைய கட்சியில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுதிருந்தார்.இதை திமுக தலைமை ஏற்றுக் கொண்டது. அதோடு ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது.
View this post on Instagram
இப்படி இருக்கும் நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மீண்டும் நடிகர் சரத்குமாரை மோசமாக பேசி இருந்தார். இதற்கு நடிகையும், பாஜக வேட்பாளருமான ராதிகா சரத்குமார் சோசியல் மீடியாவில் பதிவு ஒன்று போட்டு இருந்தார்.அதில் அவர், ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருந்த மாட்டியா? உன்னை எல்லாம் இன்னும் அந்த கட்சியில் வெச்சிருக்காங்களே அவங்கள தான் குத்தம் சொல்லணும்.
இதுல உனக்கு அந்த சாம்ராஜ்ய சக்ரவர்த்தியோட பேரு வேற! உன்னை மாதிரி ஆட்கள் எல்லாம் கடுமையாக தண்டிக்கப்படனும். shame on திமுக என்று கூறி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை ராதிகா சரத்குமார் டேக் செய்து இருக்கிறார். தற்போது இவரின் பதிவு தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படி ஒரு நிலையில் தலைமை செயலகம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ராதிகா மற்றும் சரத்குமார் பங்கேற்று இருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் ஒருவர் அரசியலில் பெண்கள் முன்னேற முடியாமல் இருக்க காரணம் என்ன என்று கேள்வி எழுப்பி இருந்தார் இதற்கு பதில் அளித்த ராதிகா நாங்கள் காரில் வந்து கொண்டிருக்கும்போது கூட சரத் என்னிடம் சொன்னார் உன்னை ஒருவர் எப்படி எல்லாம் பேசியிருக்கிறார் என்று அதற்கு நான் நேராக போய் பலர் பலர் என்று அடித்து விட்டு வருகிறேன் என்று சொன்னேன் ஆனால் இவர் தான் வேண்டாம் என்று சொல்லிவிட்டார் எப்போதும் இவர் பிரச்சனையை பெரிதாக்க விரும்ப மாட்டார் ஆனால் நான் எதுவாக இருந்தாலும் உடனே கேட்டு விடுவேன் இது போன்ற காரணத்தால் தான் பெண்களால் அரசியல் முன்னேற முடியவில்லை என்று கூறி இருக்கிறார்.






