இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ராதிகாவிற்கு கிடைத்த உயரிய விருது – காரணம் இது தான், வாழ்த்தும் ரசிகர்கள்.

0
294
- Advertisement -

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ராதிகா சரத்குமாருக்கு விருது வழங்கியுள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 80, 90ஸ் கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ராதிகா. இவர் தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த் முதல் தற்போது இருக்கும் சூர்யா, விஷால், விஜய், விஜய் சேதுபதி என்று பல்வேறு நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்குறார். இதனிடையே ராதிகா அவர்கள் பிரபல இயக்குனரும் நடிகருமான நடிகர் பிரத்தாப் என்பவரை 1985 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-
Radhika Sarathkumar Shifted To Zee Tamil

பின் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் ஆன ஒரே ஆண்டில் இவர்கள் விவாகரத்து செய்து கொண்டார்கள். அதன் பின்னர் ராதிகா லண்டனை செய்து ரிச்சர்ட் ஹார்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ரேயான் என்ற மகளும் பிறந்தார். பின் ராதிகா அவர்கள் ரிச்சர்ட்டிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். பிறகு தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருக்கும் நடிகர் சரத்குமாரை கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

ராதிகாவின் திரைப்பயணம்:

அதோடு சரத்குமாருக்கு ஏற்கனவே முதல் திருமணம் ஆகி விவாகரத்து பெற்றார். ராதிகா இரண்டாவது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சினிமாவை தாண்டி சின்னத்திரையில் கலக்கி வருகிறார் ராதிகா. பிரபல சன் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணாமலை, வாணி ராணி, செல்வி, அரசி, சித்தி என பல்வேறு தொடர்களில் நடித்து வந்தார் ராதிகா. அதுமட்டும் இல்லாமல் சீரியலை ராதிகா சரத்குமார் அவர்களே தயாரித்து வருகிறார். தற்போது ராதிகாவின் சித்தி 2 சீரியல் வெற்றிகரமாக ஒடி கொண்டு இருக்கிறது.

சின்னத்திரையில் ராதிகா:

இந்த சீரியல் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம். வெள்ளித்திரையில் சாதித்தவர்களால் சின்னத்திரையிலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்தவர் நடிகை ராதிகா சரத்குமார். தற்போது இவர் பல படங்களில் பிசியாக நடித்து கொண்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் ரடான் மீடியா ஒர்க்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ராதிகாவிற்கு விருது வழங்கி உள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது விழா:

இந்த நிகழ்ச்சியை தமிழ் ஸ்டடீஸ் யூகே எனும் அமைப்பின் சார்பாக இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். உலகெங்கும் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களை கௌரவிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த உயரிய விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஒருவர் தான் ராதிகா சரத்குமார். திரைத்துறையில் திறம்பட செயல்பட்டதற்காக இங்கிலாந்து நாட்டில் ராதிகாவிற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும், நாடாளுமன்றத்தில் விருது வாங்கிய பின்பு ராதிகா அவர்கள் கூறியிருப்பது,

விருது வாங்கிய பிறகு ராதிகா கூறியது:

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்றது மிகுந்த மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் அளிக்கிறது. இந்த தருணத்தை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. இவ்விருதிற்கு என்னை தேர்ந்தெடுத்த தேர்வு குழுவினருக்கும், இத்தனை ஆண்டு காலம் எனக்கு ஆதரவளித்த திரை மற்றும் தொலைக்காட்சி துறையினருக்கும், ரசிகர்களுக்கும், குடும்பத்தினருக்கும் மிக்க நன்றி என்று கூறியுள்ளார். இப்படி ராதிகா விருது வாங்கிய போது எடுத்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் ராதிகாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement