வடக்கில் இருந்து வந்த நடிகைகளில் இதை செய்தது ஜோதிகா மட்டும் தான் – ராதிகா பாராட்டு.

0
5937
jothika
- Advertisement -

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஜோதிகா. இவர் 2006-ஆம் ஆண்டு சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் 36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார், செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி ஆகிய படங்களில் நடித்து உள்ளார் ஜோதிகா. தற்போது ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா அவர்கள் பொன்மகள் வந்தாள் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தில் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் என பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படத்தை 2டி நிறுவனம் தயாரித்து உள்ளது.

-விளம்பரம்-

தவறாக குற்றம்சாட்டப்பட்ட ஓரு அப்பாவிப் பெண்ணை விடுவிக்கும் முயற்சியில் நேர்மையான வழக்கறிஞர் ஒருவர் போராடுகிறார். இந்த பரபரப்பான நீதிமன்ற விசாரணைக் கதைதான் ‘பொன்மகள் வந்தாள்’. ஊட்டியில் வசிக்கும் பெட்டி‌ஷன் பெத்துராஜ் என்பவர் 2004-ம் ஆண்டு நடந்த தொடர் கொலைகளில் சம்பந்தப்பட்ட ஆள் கடத்தல், கொலைக்காக தண்டனை அளிக்கப்பட்ட சைக்கோ ஜோதி என்பவரின் வழக்கை மீண்டும் விசாரிக்க ஆரம்பிக்கிறார். இதைச் சுற்றி நடக்கும் விறுவிறுப்பான கதை தான் இது.

- Advertisement -

மேலும், இந்தப் படம் தமிழ் சினிமாவில் வெளியிடாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. அதோடு ஓடிடி தளத்தில் வெளியிடும் முதல் படம் இது தான். மே 29-ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை விளம்பரப்படுத்த வீடியோ கால் மூலமாக ஜோதிகா பேட்டி அளித்து அளித்து உள்ளார். தற்போது இந்த வீடியோ வெளியானது. இந்நிலையில் ஜோதிகாவின் பேட்டி வீடியோவை பார்த்து நடிகை ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பதிவு போட்டு உள்ளார்.

PonMagal Vandhal – Official First look Teaser | Jyothika – Suriya ...

அதில் அவர் கூறியிருப்பதது, நம்பிக்கையுடன் தெளிவாக தமிழைப் பேசும் ஜோதிகாவின் முயற்சியை நான் பாராட்டுகிறேன். எவ்வளவு கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது தெரிகிறது. வடக்கிலிருந்து இங்கு வந்து இதைக் கச்சிதமாகச் செய்த ஒரே நடிகை ஜோதிகா தான். அவருக்கு என்னுடைய மனதார பாராட்டுகள் என்று கூறி உள்ளார். பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை டிரெய்லர், தொலைக்காட்சி மற்றும் யூடியூப் வாயிலாக 2 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement