எம் ஆர் ராதா நினைவு நாள் – தந்தையுடன் இருக்கும் சிறு வயது புகைப்படத்தை வெளியிட்ட ராதிகா.

0
2252
radhika

மறைந்த நடிகர் எம் ஆர் ராதாவின் நினைவு நாளில் அவரது மகளும் நடிகையுமான ராதிகா, அவருடன் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். புரட்சி தலைவர் நடிகர் எம் ஜி ஆர் காலத்தில் அவருக்கு இணையான பெரும் புகழும் கொண்டு வாழ்ந்தவர் நடிகர் எம் ஆர் ராதா .இவர் நடித்த ரத்தக்கண்ணீர் படம் இன்றளவும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு தான் இருக்கிறது.1907 இல் பிரிட்டிஷ் காலத்தில் சென்னையில் பிறந்த இவர் எம் ஜி ஆர் சிவாஜி போன்றவர்களுக்கு வில்லங்களாக நடித்துள்ளார்.

மேலும் இவர் உண்மையாகவே நடிகர் எம் ஜி ஆருக்கு வில்லனாகி அவரை துப்பாக்கியால் சுட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அதனை பற்றி பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு நாங்கள் இருவரும் சினிமாவில் சந்திப்போடுவது போல நிஜத்தில் சண்டை போட்டுக்குகொண்டோம் என்று மிகவும் சாதாரணமாக பதிலளித்திருந்தார்.

- Advertisement -

இந்த அளவிற்கு செல்வாக்கை கொண்ட இவருக்கு மொத்தம் 4 பெண்களை திருமணம் செய்துகொண்டார். சரஸ்வதி,தனால்க்ஷ்மி, ஜெயாம்மாள் மற்றும் கீதா என்று 4 மனைவிகள் இருந்தனர்.எம் ஆர் ராதா விற்கு நடிகர் ராதாவி உட்பட 3 மகன்களும் 4 மகள்களும் பிறந்தனர்.

அதில் 4வது மனைவி திருமதி கீதாவிற்கு பிறந்த மகள் தான் பிரபல நடிகைகள் ராதிகா சரத்குமார் மற்றும் நிரோஷா. இந்த நிலையில் நடிகர் எம் ஆர் ராதாவின் நினைவு நாளில் நடிகை ராதிகா சிறு வயதில் தனது தந்தையுடன் எடுத்த அரிய புகைப்படம் ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement