திடீரென நடிகை ராதிகா சரத்குமாருக்கு அறுவை சிகிச்சை நடந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 80, 90 கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வந்தவர் ராதிகா . இவர் தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் தொடங்கி தற்போது இருக்கும் சூர்யா, விஷால், விஜய், விஜய் சேதுபதி என்று பல்வேறு நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்கிறார்.

மேலும், இவர் சினிமாவை தாண்டி சின்னத்திரையில் கலக்கி வருகிறார். ராதிகா ராடான் டிவி என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் நூற்றுக்கணக்கான சீரியல்களை ராதிகா தயாரித்து இருக்கிறார். பல மெகாஹிட் சிரியல்களையும் தயாரித்த ராதிகா “சித்தி” போன்ற சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்திருக்கிறார். மேலும், சன் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணாமலை, வாணி ராணி, செல்வி, அரசி, சித்தி என பல்வேறு தொடர்களில் நடித்து இருந்தார் ராதிகா.
ராதிகா திரைப்பயணம்:
கடைசியாக ராதிகாவின் சித்தி 2 சீரியல் வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த சீரியல் பட்டி தொட்டி எல்லாம் பிரபலம். வெள்ளித்திரையில் சாதித்தவர்களால் சின்னத்திரையிலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்தவர் ராதிகா சரத்குமார். அதோடு ராதிகாவின் தயாரிப்பு மூலம் விஜய் டிவியில் “கிழக்கு வாசல்” என்ற சீரியல் ஒளிபரப்பாகி இருந்தது. இந்த சீரியல் விசுவின் சம்சாரம் அது மின்சாரம் படத்தின் கதை. மேலும், இந்த சீரியலில் நடிகர் விஜய்யின் தந்தை மற்றும் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்ட எஸ்.ஏ சந்திரசேகர் நடித்தார்.

ராதிகா பதிவு:
சீரியல் பெரிதாக ஓடவில்லை என்றவுடன் சீக்கிரமாகவே முடித்து விட்டார்கள். தற்போது ராதிகா படங்களில் பிஸியாகவும் நடித்து கொண்டு வருகிறார். அதோடு இவர் அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு தான் இவர் பிஜேபியில் இணைந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் ராதிகாவிற்கு திடீரென்று அறுவை சிகிச்சை நடந்து இருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்களை பதிவிட்டு ராதிகா, என்னைப் பற்றியோ, என் வேலை பற்றியோ ஒருபோதும் நான் பேச மாட்டேன். கடந்த இரண்டு மாதங்கள் எனக்கு ரொம்ப கொடுமையாக இருந்தது.
அறுவை சிகிச்சை செய்ய காரணம்:
இரண்டு படங்களில் தொடர்ந்து நடித்தேன். இதனால் என் முழங்காலில் காயம் ஏற்பட்டது. அதற்கு ஒரே தீர்வு அறுவை சிகிச்சை என்று சொன்னார்கள். நான் என் வேலையில் நான் ஓடிக்கொண்டே இருந்ததால் வலி நிவாரணிகள், முழங்கால் பிரேஸ், கிரையோதெரபி ஆகியவை எடுத்துக்கொண்டு வேலை செய்தேன். ஆனால், வலி குறையவில்லை. அதனால் நான் வலியால் துடித்துப் போனேன். இருந்துமே என்னுடைய குடும்பம் எனக்கு ஆதரவாக இருந்தது.
https://www.youtube.com/watch?v=vZHbFqv0pUs
பெண்களுக்கு சொன்ன அறிவுரை:
ஒரு கட்டத்தில் நான் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். நான் என்னால் முடிந்தவரை வேலையில் மட்டும் கவனம் செலுத்துகிறேன். இந்த மகளிர் தினத்தில் ஒவ்வொரு பெண்ணும் தன்னைப் பற்றியும் தன்னை மேம்படுத்திக் கொள்ளவும் உங்களை அதிகமாக நேசிக்கவும் உங்கள் வாழ்க்கையை பாராட்டவும் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதே போல் என்னுடைய மிகப்பெரிய தூண், வலிமை தங்க இதயம் கொண்ட என்னுடைய கணவர் சரத்குமார் ஒரு குழந்தையை போல என்னை கவனித்துக் கொண்டார். வலிமையாக இருங்கள் என்று கூறியிருக்கிறார்.






